பதவிக்கு வந்து சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி நானே

Published By: Raam

17 Feb, 2017 | 04:13 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)
தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்கள் கோரியுள்ளன. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய  எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதி பொறுப்பேற்று 2 வருடத்திற்கான சொத்து விபரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நானேயாகும். இருப்பினும் எனது சொத்து விபரங்கள் தேவையாயின் தேர்தல் ஆணையாளரை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் தற்போது நாட்டில் ஜனநாயக உரிமையை துட்சமாக மதித்து ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரத போராட்டங்களும் நடந்து கொண்ட வண்ணமே உள்ளன. கொழும்பில் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. நாம் வழங்கிய சுதந்திரத்தை பிரயோசமான முறையில் பயன்படுத்த வேண்டும் இப்படியொரு சுதந்திரம் ஏன் வழங்கப்பட்டது என்பதனை தெரிந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

நாட்டின் கடந்த கால ஆட்சிகளை பார்க்கிலும் நேர்மையுடன் கூடிய மாற்று ஆட்சியை கொண்டு செல்வதற்கே மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே முன்னைய ஆட்சியில் நடந்த குற்றங்கள் இந்த ஆட்சியில் நடைபெறா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

தகவல் அறியும் உரிமையை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18