குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதளஉலக குற்றவாளி ஹரக்கட்டா உட்பட குறிப்பிட்ட குழுவினரை மீட்டு செல்வதற்காக தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
கொழும்புகோட்டை நீதவான் திலினகமகே முன்னிலையில் சமர்ப்பித்துள்ள விபரங்களில் சிஐடியினர் இதனை தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை நீண்டநேரம் விசாரணை செய்த வேளை ஹரக்கட்டாவையும் ஏனையவர்களையும் சிஐடியினரிடமிருந்து மீட்டு செல்வதற்கான தாக்குதல் திட்டம் குறித்து தெரியவந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதனை ஆராய்ந்த நீதவான் இது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்த விசாரணைக்காக பொலிஸார் ஹரக்கட்டாவையும் சகாவையும் தடுத்துவைத்துள்ளனர் - ஹரக்கட்டா மடகாஸ்கரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM