(எம்.வை.எம்.சியாம்)
பாணந்துறை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, அலுப்போமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய “குடுசலிந்து” என்பவரின் பிரதான உதவியாளர் எனவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிலங்க என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிக என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM