இலங்கையின் கடந்த கால ஆயுத போராட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகளின் தாக்குதலை முறியடிக்க இலங்கை கடற்படை  மேற்கொண்ட தந்திரங்கள் தொடர்பில் இலங்கை கடற்படை  தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவிட் பாஜ்வா ஆகியோர் கலந்தாலோசித்துள்ளனர். 

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள  இலங்கை கடற்படைத்  தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாயட் பாஜ்வாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தளபதிகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பு பாகிஸ்தானின்  ராவல்பிண்டியில்  இடம்பெற்றுள்ளன. 

 இந்தப் பேச்சுவார்த்தையின் போது  பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிபுணத்துவ நலன்கள் என்பன கருத்தில் கொண்டு இந்த  கலந்துரையாடடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய பயங்கரவாத சூழலில் கடற்புலிகளின் நகர்வுகள், புலிகளின் தற்கொலை குண்டு தாரிகளின் நடவடிக்கைகள், புலிகளின் கடல்படை படகு தாக்குதல் மற்றும் ஆயுத கப்பல் நகர்வுகள் என்பவற்றை இலங்கை கடற்படையினர் எவ்வாறு அடையாளம் கண்டு அவற்றை அழித்தனர் என்ற பழைய அனுபவங்களை இந்த சந்திப்பில் பகிர்ந்துகொண்டனர் எனவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.