நுவரெலியா, பதுளை பிரதேசங்களில் 21 இந்து ஆலயங்கள் உட்பட பல இடங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பிரதான சந்தேக நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், திருடிய நகைகளை விற்பனை செய்ய உதவிய வியாபாரிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நுவரெலியா அம்பேவளை பொரகஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தலவாக்கலை பிரதான நகரில் தங்க நகைகள் பதப்படுத்தும் வியாபாரிக்கு குறித்த நகைகளை விற்பனை செய்திருந்தமை தெரியவந்தது.
கடந்த ஒரு வருடத்தில் இடம்பெற்ற குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியின் பணிப்புரைக்கமைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. துரிதமாக செயற்பட்ட பொலிஸார் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், ஹட்டன், வெலிமடை, வலப்பனை, நுவரெலியா ஆகிய நீதிமன்றங்களால் தொலைபேசி திருட்டு, பண மோசடி, உள்ளிட்ட பல்வேறு திருட்டுகள் தொடர்பான முப்பது வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையின் போது பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “ குறிப்பாக ஆலயங்களை உடைத்து திருடுவதற்கு முன் கடவுளை வணங்கி, தான் கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன். தலவாக்கலை, ராகலை, ஹைபோரஸ்ட், லிந்துல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடபுஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பெட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய இருபத்தொரு பொலிஸ் எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களை உடைத்து அதிகமாக திருடி உள்ளேன் எனவும், நான் போதைப்பொருளுக்கு அடிமையானவன்” எனவும் வாக்குமூலம் வழங்கி உள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரையும், குறித்த நபருக்கு நகைகளை விற்பனை செய்ய உதவிய வியாபாரிகள் இருவரையும் நேற்று திங்கட்கிழமை (23) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய இருவரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரபிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM