உலகக் கிண்ணத்திலிருந்து பத்திரண வெளியேறுகிறார் - மெத்யூஸ் அல்லது சமீர உள்வாங்கப்படலாம்

24 Oct, 2023 | 09:30 AM
image

(பெங்களூருவிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவின் வலது தோள் பகுதியில் தசை பிறழ்வு ஏற்பட்டுள்ளதால் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து  அவர்  வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மதீஷ பத்திரணவுக்குப் பதிலாக பெரும்பாலும் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸை அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதீஷ பத்திரணவின் தொற்பட்டையில் ஏற்பட்ட தசை பிறழ்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஸ்கான் பரிசோதனை அறிக்கை ஐசிசியின் தொழில்நுட்பக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணி முகாமைத்துவ வட்டாரம் தெரிவித்தது.

எனினும் ஐசிசியின் பதில் அறிக்கை நேற்று மாலை  வரை கிடைக்கவில்லை என அந்த வட்டாரம் தெரிவித்தது.

மதீஷ பத்திரணவினால் தொடர்ந்து விளையாட முடியாது என ஐசிசி தொழில்நுட்பக் குழு உறுதி செய்யும் பட்சத்தில் மாற்று வீரர் ஒருவரை அணியில் இணைப்பதற்கான அனுமதியை அக் குழு வழங்கும்.

தற்போது இலங்கை குழாத்தில் பயண பதில் வீரர்களாக இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் ஏஞ்சலோ மெத்யூஸ், துஷ்மன்த சமீர ஆகிய இருவரில் ஒருவரை அணியில் இணைப்பது குறித்து அணி முகாமைத்தும் ஆலோசித்து வருகிறது.

மத்திய வரிசையில் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பெயரிடப்பட்ட இலங்கையின் பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற சகலதுறை வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ், இறுதி 15 வீரர்கள் குழாத்தில் பெயரிடப்படுவார் என இரசிகர்கள் எதிர்பார்த்த போதிலும் தேர்வாளர்கள் அவரை கருத்தில் கொள்ளவில்லை.

எனினும், வழமையான அணித் தலைவர் தசுன் ஷானக்க உபாதைக்குள்ளாகி குழாத்திலிருந்து வெளியேறியதால் சகல துறை வீரருக்கான இடம் வெற்றிடமானது. இந்நிலையில் மற்றொரு பயண பதில் வீரர் சாமிக்க கருணாரட்ன அணியில் இணைக்கப்பட்ட போதிலும் அவர் எதிர்பார்த்தளவு பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கவில்லை.

தற்போது மதீஷ பத்திரண வெளியேறியுள்ளதால் ஏஞ்சலோ மெத்யூஸ் அணியில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதேவேளை, டில்ஷான் மதுஷன்கவும் கசுன் ராஜித்தவும் சிறப்பாக பந்துவீசி வருவதால் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர அணியில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பு அரிதாகவே காணப்படுகிறது.

13ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவிய இலங்கை, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நெதர்லாந்துடனான போட்டியில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

லக்னோவில் ஈட்டப்பட்ட அந்த வெற்றியுடன் இலங்கை அணியினர் தற்போது பெங்களூர் வந்தடைந்துள்ளனர்.

இன்றைய தினம் சின்னசுவாமி விளையாட்டரங்கில் இலங்கை அணியினர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56
news-image

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ராகுல்,...

2024-09-10 14:11:46