பாகிஸ்தானில், நேற்றிரவு சூஃபி பள்ளிவாசல் மீது ஐ.எஸ். இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்து நடத்தப்பட்ட நாடளாவிய தேடுதல் நடவடிக்கையில், 39 ஐ.எஸ். சந்தேக நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையின்போது 48 பேரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர், தாக்குதல் நடத்தப்பட்ட சிந்து மாகாணத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த நடவடிக்கை பற்றி வேறெந்தத் தகவல்களையும் அறியத் தருவதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதானது, உலக நாடுகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.