ஒலுவில் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் புனரமைப்பு செய்வதற்கான முதற்கட்ட கூட்டம் ஒலுவில் 06ஆம் கிராமசேவகர் பிரிவில் கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பியின் விசேட பணிப்புரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எல். அமானுல்லா, ஒலுவில் அமைப்பாளர் ஏ.சீ. சுபைர், ஒலுவில் மத்திய குழுவின் தலைவர் ஏ.எல். ஜெமில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஒலுவில் 06ஆம் பிரிவின் ஆலோசகர்களாக எஸ். ஆதம்பாவா, முன்னாள் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, ஆசிரியர் ஏ.எச்.எம்.பஹ்மி, ஏ.எல். ஜெமில் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அத்தோடு, தலைவராக ஐ. பௌஸர், செயலாளராக ஏ.பீ.எம். ரபீய், பொருளாளராக யூ.எல்.எம். றஃமான், உதவித் தலைவராக யூ.எல். ஹுசைன், உதவிச் செயலாளராக ஜே. அமீன், கொள்கை பரப்புச் செயலாளராக ஐ.எல். ஜெப்ரி, இளைஞர் அமைப்பாளராக ஏ.எச்.எம். குர்ஷித் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு, ஏ.எல்.தெளபீக், ஏ.ஜே.ஜேப்பீர், ஏ.எம்.இக்பால், ஏ.எஸ்.நஸ்லிம், ஜே.சஜீர், யூ.எல்.ஏ.கபூர், ஐ. நஜாத், ஏ.எல்.ஆசிக், எம்.ஐ.எம்.ஹனூன், ஜே.அத்தான், ஐ.எல்.அலாவுதீன், ஏ.எச்.எம். றுக்ஸான் ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM