ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன் - மனோ கணேசன் எம்.பி.

Published By: Vishnu

23 Oct, 2023 | 01:49 PM
image

முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ” ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் பற்றிய செய்திகள்  அண்மையில் அம்பலமாகியுள்ள நிலையில், முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக்  கொலை செய்ய உத்தரவிட்டவர், மற்றும் கொலையாளி யார் என்பது தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்துவேன்” என மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்நிலையில் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சைய  ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து இளைஞர்கள் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது ஆபத்தானது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (22) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறிய அவர், இதன் ஊடாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை  அரசாங்கமும் தமிழ் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகிறது. இளைஞர்கள் புலம்பெயர்வதன் ஊடாக தமிழர்கள் இருப்பை இழக்கும் அபாயமுள்ளமையினால் இதனைத் தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும்.

தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழி, அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பது, சம உரிமை வழங்குவது, நீதியாக நடந்து கொள்வது. 

இன்னும் ஒரு வழி இருக்கிறது அது சுலபமான வழி. அதாவது, தமிழர் இல்லாது விட்டால் அல்லது குறைந்து விட்டால் அந்தப் பிரச்சினை இல்லாதது சென்று விடும். அதனைத் தான் அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது. இதனை அரசியல் தலைவர்கள் தெளிவான வகையில் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய...

2025-11-07 18:55:31
news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24