மத்திய மாகாணத்தின் அரச அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் முகங்கொடுத்து வருவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சடுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மத்திய மாகாணத்தில் அரச அலுவலகங்களில் பொதுமக்கள் தொடர்பாடல் தினமாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக வருகை தருவது வழக்கமாக உள்ளது.
எனினும், மத்திய மாகாணத்தில் திங்கட்கிழமைகளில் அரச அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வெவ்வேறு பணிகள் பணிக்கப்படுவதாலும் செயலமர்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்க வேண்டி நேர்வதாலும் அரச அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அது மாத்திரமன்றி, அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சந்தர்ப்பங்களும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
அரச அலுவலகங்களையும் அரச அலுவலர்களையும் நம்பி வரும் பொது மக்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பது எனது நிலைப்பாடு. அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இத்தகைய அசமந்த போக்குகளுக்கு இடமளிக்க முடியாது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.
எனவே, பொதுமக்கள் தொடர்பாடல் தினமான திங்கட்கிழமைகளில் அரச அதிகாரிகள் மற்றும் அரச அலுவலர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையோ கூட்டங்களில் மற்றும் செயல் அமர்வுகளில் பங்குபற்றுதலை தவிர்த்திருக்கும் வகையிலோ அல்லது திங்கட்கிழமைகளில் அவ்வாறான கூட்டங்கள், செயலமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை தவிர்த்திருப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாணத்தின் அனைத்து அரசு அலுவலகங்களையும் அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM