நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் ஆபாச வீடியோ காட்சிகளை கைபேசியில் பதிவு செய்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாடசாலையொன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு நேற்று (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை வளாகத்தில் கைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவு செய்து பார்வையிட்டுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நோட்டன் பிரிஜ் பொலிஸ் குறித்தடுப்பு பிரிவினரால்   குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கெதிராக வழக்கு பதிவு செய்து, இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்