மலையகம் – 200 பற்றி பேச ஆரம்பித்துள்ள தேசிய மக்கள் சக்தி

Published By: Vishnu

22 Oct, 2023 | 09:01 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

ஜே.வி.பி என்று அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி 2015 ஆம் ஆண்டிலிருந்து 27 கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் கூட்டணியாக  மாற்றம் பெற்றுள்ளது. கடும் சிவப்பாக இருந்த தனது கட்சியின் நிறத்தை இளஞ்சிவப்பாக மாற்றியுள்ளது. 

இந்த நாட்டின் இரத்தம் தோய்ந்த வரலாற்று சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு அமைப்பு தற்போது ஜனநாயக ரீதியில் மாற்றங்களை கண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜே.வி.பியின் தலைவராக உருவெடுத்த அநுர குமார திசாநாயக்கவே தற்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் விளங்குகிறார். 

எந்த அரசாங்கமென்றாலும் ஆட்சியில் நிலவும் சீர்கேடுகள், ஊழல்களை தைரியமாக நாடாளுமன்றில் அம்பலப்படுத்தும் ஒரு தேசிய கட்சியின் தலைவராக அநுரகுமார விளங்குகின்றார். மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் நாடாளுமன்றில் பேசப்படும் போது, மலையக பிரதிநிதிகள் வாய் மூடி மெளனம் காத்தாலும் இவர் அம்மக்கள் சார்பாக பேசியிருக்கின்றார். தற்போது மலையகம் இருநூறு பற்றி அநுர  வாய் திறந்துள்ளார்.

அட்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மலையகம்– 200 அட்டன் பிரகடன நிகழ்வில் அவர் மலையக சமூகத்தின் பிரச்சினைகள்  பற்றி புதிதாக  எதுவும் கூறியிருக்கவில்லை. இந்த சமூகத்தின் வாக்கு வங்கிகளின் சாவிகளை மலையக அரசியல்வாதிகள் தம்வசம் கொண்டிருப்பதாகவும் அரசாங்கம் கேட்கும் போது அதை பாவிப்பதாகவும் வசை பாடியிருந்தார். அதுவும் மலையகத்துக்கு புதிய செய்தியில்லை. 

அவர்கள் இருநூறு வருடங்களுக்கு முன்பு   மன்னாரிலிருந்து கால்நடையாக வந்து சேர்ந்ததையும் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்திலுள்ள மலைப்பிரதேசங்களில்  குடியேற்றங்களே இல்லாத காலத்தில் அவர்கள் குடியேற்றப்பட்ட அவலத்தையும் நினைவு கூர்ந்தார். 

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் காரணமாக அட்டன் புகையிரத நிலையத்திலிருந்து இரயில்களில்  இந்த மக்கள்  ஏற்றப்பட்டு தலைமன்னார் ஊடாக   இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட வரலாற்றையும் கூறினார். 

தற்போது இருநூறு வருடங்களை கடந்தும் அவர்கள் நிலவுரிமையற்ற சமூகமாக வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், தாம் ஆட்சியமைத்தால் இந்த உரிமைகளைப் பெற்றுத்தருவதாகக் கூறினார். இவை எல்லாமே தேசிய மக்கள் சக்தியின் தலைவராக அநுர குமார கூறிய விடயங்கள். ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில்  ஜே.வி.பி என்ற அமைப்பின் தோற்றத்தையும்   பெருந்தோட்டப்பகுதிகள் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களிலும்  அந்த அமைப்பு முன்னெடுத்த அழிவு நடவடிக்கைகள் பற்றியும் மலையகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது.

இந்த அழிவுகள் , அட்டூழியங்கள் பற்றியும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அநுர குமார அறியாதவரல்லர். ஆனால் அதற்கு இந்த சமூகத்திடம் மன்னிப்பு கோரி விட்டு அவர் தனது உரையை ஆரம்பித்திருக்கலாம். 

எனினும் பிற்காலத்தில் இந்த சமூகத்தின் பிரஜா உரிமை சட்டமூலங்களுக்கு நாடாளுமன்றில் ஜே.வி.பி ஆதரவாக இருந்ததை மறுக்கவும் மறக்கவும் முடியாது. 

 2009 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இறுதி குடியுரிமைச் சட்டங்களான நாடற்ற மக்களுக்கான பிரஜாவுரிமை வழங்கும் 5 ஆம் இலக்க ( (திருத்தச்) சட்டம், இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் 6 ஆம் இலக்க  ( திருத்தச் ) சட்டம் ஆகிய இரண்டுக்கும்  பின்னணியில்    ஜே.வி.பியே இருந்தது. 

இந்நிலையில், அட்டன் நகருக்கு வந்து மலையக சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம் என்று கூறும் அநுர குமார, ஜே.வி.பியின் ஸ்தாபகரான ரோகண விஜேவீரவின் அரசியல் வகுப்பில் ஐந்தாவதான இந்திய விஸ்தரிப்பு வாத எதிர்ப்பு நிலை பற்றி அறியாதவர் அல்லர். 

 1820 களில் பிரித்தானியரால் பெருந்தோட்டத் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தென்னிந்திய உழைக்கும் வர்க்கத்தினரை கள்ளத்தோணிகள் என்றும், அவர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க வந்த அந்நிய சக்திகள் என்றும் வர்ணித்தவர் ரோகண விஜேவீர. மட்டுமின்றி இந்தத் தொழிலாளர்கள் இலங்கைக்கு நோய்களை கொண்டு வந்தவர்கள் என மிக மோசமான வார்த்தை பிரயோகங்களால் மலையக சமூகத்தை அவமானப்படுத்தியவர்கள் ஜே.வி.பியினர். 

டெல்டா தோட்ட தேயிலை தொழிற்சாலையை தீ வைத்து கொளுத்தினர். மலையகத்தின் ஏதாவதொரு பகுதியை தமது ஆக்கிரமிப்புக்குள் அவர்கள் கொண்டு வர திட்டம் தீட்டியபோது, இ.தொ.காவினர்   உடபுசல்லாவையில் வைத்து அவர்கள் அடித்து துரத்தினர். இதற்கு தோட்டத்தொழிலாளர்கள் பலர் தைரியமாக முன்வந்து அவர்களை எதிர்த்து நின்றனர். 

இந்த வரலாற்றை இப்போதுள்ள இளைஞர்கள் அறிந்துள்ளனரோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் தெளிவாக உள்ளனர். இடதுசாரி தேசியவாத கொள்கைகளுடன் தனது அரசியலை ஆரம்பித்த ஜே.வி.பி பின்னர் இனவாத அமைப்பாகவே பயணத்தை தொடர்ந்தது.   இடதுசாரி  சிந்தனைகள் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் விமல் வீரவன்ச போன்றோரை அரவணைத்த காரணத்தினால் அது இனவாத கட்சியாகவே முத்திரை குத்தப்பட்டிருந்தது. 

 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கும் ஜே.வி.பியினர் பின்பு எதற்காக மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடுகின்றனர் என்ற கேள்விக்கு இன்று வரை பதிலில்லை. ஒற்றையாட்சியையே தமது இலக்காக கொண்டு செயற்படும் ஜே.வி.பியினர்  எந்த காலத்திலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு  இதய சுத்தியாக எந்த  ஒரு தீர்வையும் முன்வைத்ததில்லை. 

ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருக்கும் கூட்டணியாக அது மக்கள் ஆதரவை அதிகம் பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. எனினும் எமது நாட்டின் மக்கள் எக்காலத்திலும் நேர்மையாக அரசியலை முன்னெடுக்கும் எந்த அமைப்புக்கும் பெருவாரியான ஆதரவை எப்போதும் வழங்கியதில்லை. ஏனென்றால் மக்களும் ஊழலுக்கு பழகி விட்டனர். 

இந்நிலையில் மலையக சமூகத்தை குறிவைத்து தேசிய மக்கள் சக்தி அவர்களின் உரிமைகள் குறித்து பேச ஆரம்பித்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல. 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 16 ஆசனங்களைப் பெற்ற அவர்கள் 2004 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு 39 ஆசனங்களைப் பெற்றனர் என்பது முக்கிய விடயம்.

அந்த சந்தர்ப்பங்களிலும்  மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையும் இல்லை , தமது தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லை. அது குறித்து ஜே.வி.பி எப்போதும் பேசியதில்லை. ஏனென்றால் அப்போது தேசிய அரசியலில் பலமிக்க அணியாக அந்த அமைப்பு இருந்தது.   

இலங்கையின் மூன்றாவது சக்தியாக உருவெடுக்க இருந்த காலகட்டங்களை ஜே.வி.பி தாண்டி விட்டது என்பது இறுதியாக இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தெளிவானது. மொத்தம் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே அதனால் பெற முடிந்தது. ஆகவே இப்போது அதையும் தக்க வைக்க வேண்டிய நிலையில் அது உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டங்கள், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அணிதிரளும் ஆதரவாளர்கள் ஏன் தேர்தல்களில் தமக்கு வாக்களிப்பதில்லை என்ற விடயம் அவர்களுக்கு தெரியாமலில்லை.  உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் வர்க்கத்தினரின் எண்ணிக்கை இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் இல்லை. இருந்தாலும் அவர்கள் போராட வருவதில்லை. தமது பிரதிநிதிக்காக ஏதோ வந்து கட்சிக் கொடிகளை ஏந்தி கோஷம் போடுவதோடு அவர்களின் குரல் ஓய்ந்து விடுகின்றது. 

அப்படியிருக்கும் போது தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்கள் இவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் மனதில் ஜே.வி.பி என்றால் பழைய வரலாறு தான் வந்து போகும். கட்சியின் பெயரையும் நிறத்தையும் மாற்றினால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இவை எல்லாவற்றையும் விட, தேசிய மக்கள் சக்தி ஏதாவதொரு விதத்தில் அதிகாரங்களை கொண்டிருந்தாலும் மலையக சமூகத்துக்கு வேறு தரப்பினர் ஊடாக நன்மைகள் கிடைக்காமல் மலையக பிரதிநிதிகள் பார்த்துக்கொள்வர். 

ஏனென்றால் அநுர கூறியது போன்று, இந்த சமூகத்தினருடைய வாக்கு வங்கியின் சாவிக்கொத்து மலையக பிரதிநிதிகளிடமே உள்ளது. அதை தமக்குள் மாற்றிக்கொள்வார்களே ஒழிய வெளியிலிருந்து வரும் எந்த நபருக்கும் பார்ப்பதற்குக் கூட இவர்கள் கொடுக்க மாட்டர்.      

அந்த சந்­தர்ப்­பங்­க­ளிலும்  மலை­யக பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு காணி உரி­மையும் இல்லை , தமது தொழிலில் உழைப்­புக்­கேற்ற ஊதி­யமும் இல்லை. அது குறித்து ஜே.வி.பி எப்­போதும் பேசி­ய­தில்லை. ஏனென்றால் அப்­போது தேசிய அர­சி­யலில் பல­மிக்க அணி­யாக அந்த அமைப்பு இருந்­தது.   

இலங்­கையின் மூன்­றா­வது சக்­தி­யாக உரு­வெ­டுக்க இருந்த கால­கட்­டங்­களை ஜே.வி.பி தாண்டி விட்­டது என்­பது இறு­தி­யாக இடம்­பெற்ற பொதுத்­தேர்­தலில் தெளி­வா­னது. மொத்தம் மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மாத்­தி­ரமே அதனால் பெற முடிந்­தது. ஆகவே இப்­போது அதையும் தக்க வைக்க வேண்­டிய நிலையில் அது உள்­ளது.

தேசிய மக்கள் சக்­தியின் ஆர்ப்­பாட்­டங்கள், பொது நிகழ்­வு­களில் கலந்து கொள்ள அணி­தி­ரளும் ஆத­ர­வா­ளர்கள் ஏன் தேர்­தல்­களில் தமக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என்ற விடயம் அவர்­க­ளுக்கு தெரி­யா­ம­லில்லை.  உரி­மை­க­ளுக்­காக போராடும் தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரின் எண்­ணிக்கை இன்று பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் இல்லை. இருந்­தாலும் அவர்கள் போராட வரு­வ­தில்லை. தமது பிர­தி­நி­திக்­காக ஏதோ வந்து கட்சிக் கொடி­களை ஏந்தி கோஷம் போடு­வ­தோடு அவர்­களின் குரல் ஓய்ந்து விடு­கின்­றது. 

அப்­ப­டி­யி­ருக்கும் போது தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்கள் இவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் மனதில் ஜே.வி.பி என்றால் பழைய வரலாறு தான் வந்து போகும். கட்சியின் பெயரையும் நிறத்தையும் மாற்றினால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இவை எல்லாவற்றையும் விட, தேசிய மக்கள் சக்தி ஏதாவதொரு விதத்தில் அதிகாரங்களை கொண்டிருந்தாலும் மலையக சமூகத்துக்கு வேறு தரப்பினர் ஊடாக நன்மைகள் கிடைக்காமல்    மலையக பிரதிநிதிகள் பார்த்துக்கொள்வர். 

ஏனென்றால் அநுர கூறியது போன்று, இந்த சமூகத்தினருடைய வாக்கு வங்கியின் சாவிக்கொத்து மலையக பிரதிநிதிகளிடமே உள்ளது. அதை தமக்குள் மாற்றிக்கொள்வார்களே ஒழிய வெளியிலிருந்து வரும் எந்த நபருக்கும் பார்ப்பதற்குக் கூட இவர்கள் அனுமதி கொடுக்க மாட்டர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள்...

2024-06-22 13:44:21
news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51
news-image

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க மறுப்பு

2024-06-16 17:12:22
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-16 19:19:17
news-image

சர்வதேச மனித உரிமையும் விநோதமானவர்களும்

2024-06-16 16:38:37
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழர்களுக்கு என்ன...

2024-06-16 16:15:21
news-image

காஸா போர் நிறுத்தம் ‘பிரசாரப்படுத்தப்படும் பாசாங்குகள்’

2024-06-16 16:40:06