முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 18 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலிலும் பனியிலும் வீதியையே வீடாக்கி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இந்த நிலையில் இன்றையதினம் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கத்தோலிக்க மதகுருமார்கள்,  மன்னார் பிரஜைகள் குழுவினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.


வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், அனந்தி சசிதரன், குணசீலன் ஆகியோரும் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.