முறையற்ற முகாமைத்துவமே மின்சார சபை நட்டத்தில் இயங்க காரணம் - வே.இராதாகிருஷ்ணன்

22 Oct, 2023 | 06:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மின்சார கட்டண அதிகரிப்பு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மேலும் பாரிய சுமையாக அமைந்துள்ளதாகவும் முறையற்ற முகாமைத்துவமே மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதற்கு காரணம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து வினவிய போது கேசரிக்கு இவ்வாறு பதில் அளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது வருமானம் குறைவாக உள்ள பெருந்தோட்ட மக்களை கடுமையாக பாதித்துள்ளதோடு  நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு கடும்சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தம்மிடம் இருந்த தங்க ஆபரணங்கள் போன்றவற்றை விற்றே இம்மக்கள் மின்சார கட்டணம் போன்றவற்றை செலுத்தி உள்ளனர். இந்த சூழலிலும் கட்டணங்கள் மேலும் அதிகரிக்குமாக இருந்தால் மக்கள் எவ்வாறு வாழ முடியும்.

மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதே கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என சொல்லப்படுகிறது. முறையற்ற முகாமைத்துவமே மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதற்கு காரணம் ஆகும். மின்சார சபையில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதுடன் அவர்களின் கொடுப்பனவுகளுக்காக அதிகம் செலவிடப்படுகிறது. பாரிய கட்டத்துக்கு இவ்வாறன விடயங்களே காரணம் ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு அமையவே தற்போது நாட்டில் தீர்மானம் எடுக்கப்படுகின்றது.இதனால் மக்களின் மீதே இறுதி சுமை சுமத்தப்படுகின்றது. நாட்டில் பல்வேறு ஊழல்கள் நடந்த போதும் அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை. துரதிஷ்டவசமாக ஊழலினால் ஏற்பட்ட பிரதிபலனை இறுதியில் மக்களே எதிர்கொள்கின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20