(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாகவே சீன எக்ஸிம் வங்கியும், சீன அரசாங்கமும் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தீர்மானித்துவிட்டன.
இவ்வாறு சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்படும் தலைவருடன் இணைந்து பயணிப்போம். 2024இல் அதிக வாக்குகளுடன் ஆட்சியமைப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல்களில் தோல்வியடைந்ததன் பின்னர் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்த போது, தேசிய பட்டியலுக்கான ஒரு உறுப்பினரைக் கூட நியமிக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சியால், எவ்வாறு மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் நாம் எவரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்சியமைத்துள்ளோம்.
நாட்டின் பொருளாதாரம் உட்பட எதிர்காலம் தொடர்பில் மிகசரியாக கணித்து, எமது தலைவர் எம்மை வழிநடத்தியமையால் இன்று ஐ.தே.க. அனைவராலும் பேசப்படும் கட்சியாக மாறியுள்ளது. எமது குழு மிகவும் ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகிறது. 2024இல் நாம் மீண்டும் ஐ.தே.க. ஆட்சியை அமைப்போம்.
நாட்டின் நான்கு புறங்களிலிருந்தும் வருகை தந்துள்ள இந்த மக்கள் அனைவரும் இதுவரை எமக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, இனிவரும் காலங்களிலும் அந்த பலத்தை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம். எமக்கு தற்போது புத்திசாலியான தலைவர் இருக்கின்றார். இலங்கையை எவ்வாறு அபிவிருத்தியடைச் செய்வது என்பதை அவர் அறிவார். அதனை உலகத் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் தொடர்பில் சீனா எவ்வாறு செயற்படும் என்ற ஐயம் காணப்பட்டது. ஆனால் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாகவே சீன எக்ஸிம் வங்கியும், சீன அரசாங்கமும் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தீர்மானித்துவிட்டன. இவ்வாறான சர்வதேச அங்கீகாரம் பெற்ற தலைவர் எமக்கு இருக்கின்றமையால் அவருடன் இணைந்து பயணிப்போம் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM