(லக்னோவிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக லக்னோ, பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) நடைபெற்றுவரும் உலகக் கிண்ண 19ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.
கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷான் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி நெதர்லாந்தின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசையை ஆட்டம் காணச் செய்தனர்.
இதன் காரணமாக 22ஆவது ஓவரில் நெதர்லாந்து 6 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
எனினும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச், லோகன் வென் பீக் ஆகிய இருவரும் சாதனைமிகு 130 ஓட்டங்களைப் பகிர்ந்து நெதர்லாந்துக்கு உயிர்கொடுத்தனர்.
உலகக் கிண்ண வரலாற்றில் 7ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.
ரவிந்த்ர ஜடேஜா, தோனி ஆகிய இருவரும் நியூஸிலாந்துக்கு எதிராக மென்செஸ்டரில் 2019இல் பகிர்ந்த 116 ஓட்டங்களே இதற்கு முன்னர் 7ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 70 ஓட்டங்களையும் லோகன் வென் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களை விட முன்வரிசையில் கொலின் அக்கமன் 29 ஓட்டங்களையும் மெக்ஸ் ஓ'டவ்ட் 16 ஓட்டங்களையும் பெற்றனர். 26 வைட்கள் உட்பட 33 உதிரிகளும் நெதர்லாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டுவதாக அமைந்தது.
பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 50ட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
263 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM