இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் , அணித்தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணித் தலைவராக செயற்படும் சங்கக்கார நேற்றைய லாஹுர் கெலண்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஒரு ஆறு ஓட்டம் மற்றும் 8 நான்கு ஓட்டம் அடங்கலாகவே இவர் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

எனினும் குறித்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.