"முகத்தில் முகம் பார்க்கலாம்" ; பளபளப்பை கூட்டலாம்!

Published By: Nanthini

21 Oct, 2023 | 01:08 PM
image

* பாலை காய்ச்சும்போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி, அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

* க்காளியை மிக்ஸியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலை மா போட்டு கழுவினால் முகம் பளபளப்பு அடையும்.

* சிறிதளவு வெண்ணெய் எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மா போட்டு கழுவினால், மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

ன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழைப்பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணிநேரம் கழித்து முகம் கழுவினால் முகப் பளபளப்பு கூடும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

* தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறெடுத்து, அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

* பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, கழுவி வர முகம் பளப்பளப்பாகும்.

* ருளைக்கிழங்கு சாற்றுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

* ஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் பருக்கள் வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்