கேகாலை - கருந்தப்பனை பகுதியில் ஆட்டுக்குட்டி ஒன்று ஒற்றைக் கண்ணுடன் பிறந்துள்ளதாகவும் பார்ப்பதற்கு வேற்றுக் கிரகவாசியை போன்று தோற்றமளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறுpத்த ஆட்டுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள ஆடு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை ஈன்றுள்ள போதிலும், அதில் ஒரு ஆட்டுக்குட்டி இவ்வாறு ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆட்டு குட்டியை காண பிரதேச மக்கள் படைபெயடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.