வட்ஸ் அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப் போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஷூக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.
வட்ஸ் அப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர்.
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வட்ஸ் அப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இந்த வட்ஸ் அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. பாடசாலை தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வட்ஸ் அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வட்ஸ் அப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப்போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷூக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வட்ஸ் அப் பயனாளர்கள், விரைவில் ஒரே கைபேசியில், இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு தொலைபேசி எண்களிலும், வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வட்ஸ் அப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இனி, வட்ஸ் அப்பில் ஒரு எண்ணை லாக் அவுட் செய்ய வேண்டிய அவசியமோ அல்லது இரண்டு கைப்பேசிகளைப் பயன்படுத்தும் பிரச்சினையோ, மாற்றி மாற்றி வட்ஸ் அப் பயன்படுத்தும் போது தவறானவர்களுக்கு தகவல் அனுப்பிவிடுவோமோ என்ற அச்சமோ தேவையில்லை என்றும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.
வட்ஸ் அப் செட்டிங்கில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்துக்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து, ஆட் அக்கவுண்ட் என்று சேர்த்துக் கொள்ளலாம். அதிகாரப்பூர்வ வட்ஸ் அப் செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM