நெதர்தலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை சுவைக்குமா இலங்கை?

21 Oct, 2023 | 11:28 AM
image

(லக்னோவிலிருந்து நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது வெற்றியைக் குறிவைத்து இலங்கை அணி தனது நான்காவது லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி லக்னோ, பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த இலங்கை, என்ன விலை கோடுத்தேனும் வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் நெதர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

ஆகையால், இந்தப் போட்டி இலங்கை அணிக்கு மிகவும் தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகலதுறைகளிலும் பிரகாசிப்பது அவசியமாகும்.

துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் புத்திசாதுரியத்துடன் கடினமான பந்துகளை நிதானத்துடன் எதிர்த்தாடி ஒற்றைகளையும் இரட்டைகளையும் பெறுவதுடன் இலகுவான பந்துகளை பவுண்டறிகளாக்குவது அவசியமாகும்

அதேபோன்று களத்தடுப்பின்போது இலக்குகளை நோக்கி பந்துவீசும் அதேவேளை களத்தடுப்பு வியூகங்களுக்கு ஏற்பவும் பந்துவீசவேண்டும். அத்துடன் களத்தடுப்பில் மிகத் திறமையாக செயல்படவேண்டும்.

இவை அனைத்தையும் இலங்கை வீரர்கள் போட்டியின்போது பிரயோகிக்கத் தவறினால் அதற்கான பலாபலனை அனுபவிக்க வேண்டிவரும்.

இந் நிலையில், இதுவரை தமது அணி மாத்திரமே புள்ளி எதனையும் பெறாமல் இருப்பதாகவும் நெதர்லாந்துடனான போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதால் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் இலங்கையின் உதவிப் பயிற்றுநரும் துடுப்பாட்டப் பயிற்றுநருமான நவீட் நவாஸ் தெரிவித்தார்.

'ஆரம்பப் போட்டிகள் இரண்டில் நாங்கள் திறமையை வெளிப்டுத்தினோம். ஆனால், எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது. எங்களது குறைகளைக் நாங்கள் இனங்கண்டுள்ளோம். எனவே நெதர்லாந்தை நேர்மறையான மனோநிலையுடன் எதிர்கொள்ளவுள்ளோம்' என்றார்.

'ஒவ்வொரு போட்டியையும் ஒவ்வொன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன். எனவே அடுத்த போட்டி குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். எஞ்சியுள்ள போட்டிகளில் எவ்வாறு விளையாடவேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். நாங்கள் இந்த உலகக் கிண்ணத்திற்கு இரண்டு பிரதான பந்துவீச்சாளர்கள் இன்றியே வந்துள்ளோம். வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர ஆகியோர் உபாதைக்குள்ளானது எங்களது துரதிர்ஷ்டம். நேர்மையாக சொல்வதென்றால் அவர்கள் இல்லாதது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் ஆரம்பப் போட்டிகள் இரண்டில் மஹீஷ் தீக்ஷன விளையாடததும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

'அணியில் இடம்பெறும் வீரர்கள் இளையவர்கள் என்பதால் அவர்களுக்கு தவறுகள் இழைக்க நேரிடுகிறது. தவறுகளிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த உலகக் கிண்ணம் நீண்ட போட்டி. எனவே எமது இளம் வீரர்கள் கற்றுக்கொண்டு தங்களது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும். நாளை ய (இன்று) போட்டியில் எமது வீரர்கள் முழுவீச்சில் விளையாடி வெற்றியுடன் முன்னோக்கி நகர்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்' என நவீட் நவாஸ் மேலும் கூறினார்.

இதேவேளை, 'இலங்கையுடன் உலகக் கிண்ண தகுதிகாணில் அடைந்த இரண்டு தோல்விகளுக்கு எமது துடுப்பாட்டம் பிரகாசிக்காததே காரணம். அப்போட்டிகளில் ஹசரங்க, தீக்ஷன ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு சிரமத்தைக்கொடுத்தனர். அவர்களில் ஹசரங்க உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடாத போதிலும் இலங்கை சுழல்பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறந்தவர்கள். எனவே சுழல்பந்துவீச்சாளர்களை நாங்கள் சிறப்பாக எதிர்கொண்டால் வெற்றிபெறமுடியும்' என ஊடக சந்திப்பில் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நெதர்லாந்து வீரர் டேஸா நிடமனுரு குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, நெதர்லாந்துடனான போட்டிக்கான இலங்கை அணியில் பெரும்பாலும் லஹிரு குமாரவுக்கப் பதிலாக கசுன் ராஜித்த அணியில் இணைதுக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார அல்லது கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷான்.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மெக்ஸ் ஓ'டவ்ட், கொலின் அக்கமன், பாஸ் டீ லீட், சைப்ராண்ட் எஞ்சல்பெச்ட், டேஜா நிடாமனுரு, ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), லோகன் வென் பீக், ரோலோவ் வென் டேர் மேவ், ஏரியன் டட், போல் வென் மீக்கெரன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56
news-image

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ராகுல்,...

2024-09-10 14:11:46