பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு ஹட்டன் சிவனொளிபாதமலைக்கு சென்ற பிரான்ஸ் நாட்டவர் மீண்டும் தனது உல்லாச விடுதிக்கு திரும்புகையில் தான் பயணித்த முச்சக்கரவண்டியில் ஞாபகமறதியாக வைத்து சென்ற 80,000 ரூபா பெறுமதியான கையடக்கதொலைபேசியை திருடி விட்டார் என குற்றச்சாட்டில் ஹட்டன் பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ஹட்டன் நகரில் குறித்த பிரான்ஸ் பிரஜைகள் தங்கியிருக்கும் விடுதிக்கு முச்சக்கரவண்டியில் செல்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தாம் மறதியாக வைத்து சென்ற கையடக்கதொலைபேசி காணாமல்போனதையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விரைவாக செயல்பட்ட பொலிஸ் குழு அரை மணி நேரத்தில் முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்து கையடக்கதொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.

பிரான்ஸ் பிரஜைகளிடம் கையடக்கதொலைபேசியை பொலிஸார் கையளித்ததன் பின்னர் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் பிரஜைகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்ட முச்சக்கரவண்டி சாரதிக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கயிருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)