சர்வதேச சட்டத்தை மீறி இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலை சர்வதேசம் தொடந்தும் பார்த்துக்கொண்டிருக்கிறது - ஹக்கீம் குற்றச்சாட்டு

20 Oct, 2023 | 04:58 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன் மக்கள் மீது  சர்வதேச சட்டத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன் ஹமாஸ் குழுவினர் பொது மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலையும் நாங்கள அனுமதிக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இஸ்ரேல் பலஸ்தீனில் வைத்தியசாலை மீது மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் மூலம் யுத்தக்குற்றத்தை மேற்கொண்டுள்ளது. 

பலஸ்தீனில் 2,2 மில்லியன் மக்கள் மிகவும் மோசமான முறையில் தாக்கப்படுகின்றனர்.  பெண்கள், முதியோர், சிறுவர் என கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

பலஸ்தீன் மீது தடைசெய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில்  இஸ்ரேல் சர்வதேச சட்டத்தைமீறி செயற்பட்டு வருவதை உலக நாடுகள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

அத்துடன் இஸ்ரேலின் இந்த தாக்குதலை இன அழிப்பாகவே நாங்கள் பார்க்கிறோம். காஸா பல்லத்தாக்க்கை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தவே முயற்சிக்கின்றனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு அந்த அரசாங்கங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுளளது.

மேலும் இந்த மோதல் காரணமாக பாரிய தாக்கத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடி போன்ற  பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் இந்த மோதலை நிறுத்துவதற்கு உலக நாடுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஹமாஸ் குழுவின் தாக்குதல் இஸ்ரேலின் புலனாய்வு துறையில் பாரிய குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன அதேநிலையில் ஹமாஸின் தாக்குதலால் பலஸ்தீன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இஸ்ரேலின் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்த மோசமான கூற்றே ஹமாஸ் தாக்குதல் நடத்த காரணமாகும்.

மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக சில பத்திரிகைகளில் பக்கச்சார்பான கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஆங்கில பத்திரிகை ஒன்றில் பேராசிரியர் ஒருவர் எழுதி இருக்கும் கட்டுரை இஸ்ரேலுக்கு சார்ப்பாகவே எழுதப்பட்டிருக்கிறதை எமக்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. 

ஆனால் மத்திய கிழக்கில் இருக்கும் இஸ்ரேலே ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது  இந்த பேராசிரியர் இஸ்ரேலுக்கு சார்ப்பாக எழுதி இருக்கிறார்.

அத்துடன் சஹ்ரான் இஸ்ரேலின் புலனாய்வு துறையுடன் இணைந்து செயற்பட்டவர் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாக்குதல் இடம்பெற்ற சில தினங்களுக்கு பின்னர் பேராயார் கர்தினாலை நாங்கள் சந்தித்தபோதும் இஸ்ரேலின் கூலிப்படையினரே இதற்கு பின்னணியில் இருக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதனால் கிறிஸ்தவர்களை கொலை செய்ய  முஸ்லிகளுக்கு என்ன தேவை இரு்கிறது. இஸ்ரேல் எந்த நாட்டுக்கு சென்றாரும் அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரிசலை ஏற்படுத்தவே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

எனவே பயங்ரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டியது.  அதேநேரம் ஹமாஸை நியாயப்படுத்த முற்படவில்லை. என்றாலும் இஸரேலின் மிகவும் மோசமான தாக்குதலை யூத மக்களும் கண்டித்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ...

2024-02-28 18:09:20
news-image

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை...

2024-02-28 18:03:47
news-image

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள்...

2024-02-28 17:33:06
news-image

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால்...

2024-02-28 17:42:48
news-image

குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள்...

2024-02-28 17:11:43
news-image

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை...

2024-02-28 17:09:46
news-image

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்...

2024-02-28 17:10:31
news-image

இராணுவத்தால் கையளிக்கப்பட்ட நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட...

2024-02-28 17:08:30
news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இலங்கையின்...

2024-02-28 17:07:39
news-image

துணிகளை உலர வைக்க வீட்டின் கொங்கிரீட்...

2024-02-28 17:11:49
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஸ்ரீலங்கா...

2024-02-28 16:18:13