கடந்த 2016 இல் இனப்படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்ஷன் ஆகியோரது 7 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று (20) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, உயிர் நீத்த மாணவர்களின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி தூவி, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில் குமாரினால் நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.
இந்த நினைவேந்தலில் குறித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில் குமார் மற்றும் பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஐயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி இரவு, கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் வைத்து, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM