வடக்கு - கிழக்கில் வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்ரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.
மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்றதோடு பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் வழமை போல் இடம்பெற்றது.
மன்னார் நீதிமன்ற செயல்பாடுகள் வழமை போல் இடம் பெற்ற போதும் சட்டத்தரணிகள் மன்றுக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சில உணவகங்கள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM