கொழும்பின் இரு வேறு பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் மருதானை மற்றும் பொரளை ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் இருவேறு இடங்களில் மோதிக்கொண்டதில் 8 மாணவர்கள் காயமடைந்த விவகாரத்துக்கு ஒரு மாணவிஒயே காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருதானை பொலிஸாரும் பொரளை பொலிஸாரும் முன்னெடுத்த விசாரணைகளிலேயே  இது தெரியவந்துள்ளது. இந்  இது தொடர்பில் பொரளை, மருதானை பொலிஸாரினால் 15 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மாளிகாகந்தை மற்றும் புதுக்கடை நீதிவான் நீதிமன்ரங்களில் ஆஜர்ச் எய்யப்ப்ட்டு கடும் நிபந்தனை மற்றும் எச்சரிக்கைக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோதலுடன் தொடர்புடைய பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மீது பாடசாலை நிறைவடைந்த பின்னர் அண்மையில் வெலிக்கடை சிறைக்கு அருகில் வைத்து மற்றை பிரபல பாடசாலை மாணவர்களால் தககுதல் நடத்தப்ப்ட்டுள்ளது.

மாணவி ஒருவருடன் தொடர்புபட்ட தனிப்பட்ட விவகாரம் ஒன்றுக்காகவே அந்த மாணவன் மீதி இவ்வாறு தககுதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பழி தீர்க்கும் விதமாகவே நேற்று முன்தினம் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் நேற்று முன்தினம் பாடசாலை நேரம் முடிவடைந்ததும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு இடத்திலும் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு இடத்திலும் இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவக் குழுக்களும் மோதிக்கொண்டுள்ளனர். பொல்லுகள், போத்தல்கள், சைக்கிள் சைன் உள்ளிட்டவற்ரைக் கையில் ஏந்தியே இந்த மோதல்கள் இடம்பெற்றன.

இதன் போது பிரதான வீதியில் பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும், தனியார் போக்குவரத்து பஸ் வண்டியொன்றும் மாணவர்களின் தககுதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளன. இதனைவிட இரு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்களும் ஒரு காரும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இந்த மோதல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை செய்துவரும் பொரளை மற்றும் மருதானை பொலிசார் நேற்று முன்தினம் மாலையாகும் போது சம்பவத்துடன் தொடர்புடைய 15 மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆர்ம்பிக்கப்ப்ட்டிருந்தன.

கொழும்பு மத்திய பிரிவுக்கு பொருப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாலிய சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக மருதானை மற்றும் பொரளை பொலிசார் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு மேலதிகமாக இவ்விரு பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளின் பாதுகபபும் பலப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் மருதானை பொலிஸாரினால் கைதான 10 மாணவர்கள் மாளிகாகந்த நீதிவான் துலானி அமரசிங்க முன்னிலையில் பொரளை பொலிசாரினால் கைது செய்யப்ப்ட்ட 5 மாணவர்களும் கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திசாநாயக்க முன்னிலையிலும் ஆஜர் செய்யப்பட்டனர். இதன் போதே அவர்கள் சரீரப் பிணைகளில் விடுவிக்கப்ப்ட்டனர்.

இதனைவிட  மாணவர்கள் நடவடிக்கை தொடர்பில் பெற்றோர் அவதானமாக செயற்படுமாறும் இதன் பிரகு இவ்வாறான சம்ப்வங்கள் தொடர்பில் பொலிஸார் கடுமையாக செயற்படுவர் எனவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் ம அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.