இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர் நாளை சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார். 

இலங்கை - இந்திய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான உத்தியோகப்பூர்வமானதும் முக்கியமானதுமானதாக வெளிவுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கரின் விஜயம் அமைந்துள்ளது.

குறிப்பாக இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளப்பட உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் திருகோனமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து இந்த வியத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும்.

எவ்வாறாயினும் அம்பாந்தொட்டை துறைமுகம் , துறைமுக நகர் திட்டம் மற்றும்  சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பாரிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கில் எதிர்வரும் மார்ச் மாத்தில் சீனாவின் உயர் மட்ட குழு இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்னராக இந்திய வெளிவுறவு செயலரின் இலங்கை விஜயம் அமையலாம் என கூறப்படுகின்றது. 

மேலும் இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் சீனா மற்றும் பங்களதேஷ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக புதுடெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் 15 ஆயிரம் ஏக்கரில் சீன- இலங்கை சுதந்திர வர்த்தக வலயம் என பல்வேறு முக்கியமான திட்டங்களில் சீனா முதலீடுகளை மேற்கொள்ளுகின்ற நிலையில் இந்திய வெளிவிவகாரச் செயலரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.