படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆவது நினைவுதினம் வவுனியா ஊடக அமையத்தில் இன்று (19) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாவது ஈகை சுடரினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கி. வசந்தரூபன் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நிமலராஜனின் உருவப்படத்துக்கு ஏனைய ஊடகவியலாளர்கள் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் மலரஞ்சலியும் செலுத்தினர்.
இதன்போது நினைவுப் பேருரையினை ஊடகவியலாளர் இ.சற்சொரூபன் ஆற்றுகையில்,
இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாகும் நிலைமை நீடித்து வருகிறது. அத்துடன் நிமலராஜன் உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி பல வருடங்களாக மறுக்கப்பட்டு வருகின்றது.
அந்த கொலைகள் தொடர்பாக எவ்வித உள்நாட்டு விசாரணைகளோ அல்லது சர்வதேச விசாரணையோ இடம்பெறாமல் இருக்கின்றமையையிட்டு நாம் கவலையடைகின்றோம்.
இந்நிலையில், ஊடக சுதந்திரத்தினை பாதுகாப்பதுடன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் உரிய தரப்புக்கள் கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM