சர்வதேச பிரயாணிகள் சேவையில் ஒரு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் FitsAir

19 Oct, 2023 | 08:50 PM
image

கட்டுபடியான கட்டணம் மற்றும் நேரம் தவறாத சேவை ஆகியவற்றுக்காக இலங்கையில் பெயர்பெற்ற, தனியாருக்குச் சொந்தமான, இந்த வகையில் முதன்முதலான விமான சேவையான FitsAir, தனது ஒரு ஆண்டு நிறைவை அண்மையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளது.

சாதனைகள், புத்தாக்கம் மற்றும் துடிப்பான, இளமைபொங்கும் உற்சாக உணர்வு ஆகியன நிறைந்த ஒரு ஆண்டாக இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளது. வெறும் பன்னிரண்டு மாதங்கள் என்ற குறுகிய காலத்தினுள் இந்த விமான சேவை இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விநோதத்தை நேசிக்கின்ற மற்றும் சாகசங்களை விரும்புகின்றவர்களுக்கு அவர்களுடைய ஆவலையும் நிறைவேற்றியுள்ளது.

அனைத்து இலங்கை மக்களுக்கும் ஆகாய மார்க்கமான பிரயாணத்தை அணுகக்கூடியதாகவும், கட்டுபடியானதாகவும் மற்றும் மகிழ்ச்சி கொண்டதாகவும் மாற்ற வேண்டும் என்ற ஒரு துணிச்சலான குறிக்கோளுடன் விமான சேவை தொழிற்துறையில் FitsAir காலடியெடுத்து வைத்தது.

ஆரம்பித்த நாள் முதற்கொண்டே, குறைந்த கட்டணங்களுடனான விமான சேவைகள் மற்றும் மேம்பட்ட சேவைகளை வழங்கி, பிரயாண அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த விமான சேவை பயணித்து வருகின்றது. விமானப் போத்துவரத்து துறையை வெற்றிகரமாக உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ள  FitsAir பிரயாணிகளுக்கு நற்பயனை வழங்கி, 'More Sky for Less' (குறைந்த செலவில் கூடுதலான பிரயாணம்) என்ற தனது அர்ப்பணிப்புடன் தொழிற்துறையின் வளர்ச்சியை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.

இந்த மகத்தான தருணம் குறித்து FitsAir இன் நிறைவேற்றதிகாரப் பணிப்பாளரான அமார் காசிம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எமது பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை இலக்கினை அறிவிப்பதில் நாம் மிகுந்த பெருமை அடைகின்றோம். வாடிக்கையாளர்களின் திருப்தி மீதான அர்ப்பணிப்புடன்  FitsAir இன் குறிக்கோள் மையம் கொண்டுள்ளதுடன், மிகவும் பிரபலமாகி வருகின்ற ''Ahase Fun' என்ற மகுட வாக்கியத்தையும் உண்மையாக கடைப்பிடித்து வருகின்றது. FitsAir  ஒரு தனியார் விமான சேவை என்ற வகையில், பிரயாணிகளுக்கு நிகரற்ற அனுபவத்தை வழங்குவதை தொடர்ச்சியாக முன்னெடுத்து, வாடிக்கையாளர் சேவைக்கு முதலிடம் அளிக்கின்றது.

எம்மைப் பொறுத்தவரையில், இது வெறுமனே ஆகாயமார்க்க போக்குவரத்து மட்டும் அல்ல, மாறாக மறக்க முடியாத அனுபவங்களைத் தோற்றுவிப்பதாகும். FitsAir தனது முதலாவது ஆண்டு சாதனைகளின் நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில், இந்த அதிவிசேட பயணத்தில் உள்ளங்கமாக விளங்கும் தனது பிரயாணிகள், கூட்டாளர்கள், அர்ப்பணிப்புடனான ஊழியர்கள், விமானிகள் மற்றும் விமான சிப்பந்திகள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. இது வெறும் ஆரம்பம் மாத்திரமே, அனைவருக்கும் ஆகாயத்தில் இன்னும் கூடுதலான வியப்பிற்கும், கூடுதலான வாய்ப்புக்களுக்கும் மற்றும் அனைத்திற்கும் மேலாக, கூடுதலான விநோத அனுபவத்திற்கும் FitsAir உறுதியளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

பிரயாணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அவர்களை இலகுவாக எடுத்துச் செல்கின்ற FitsAir, தொழிற்சந்தையில் மாற்றத்திற்கான ஒரு சிறந்த வழிகாட்டி. வெறும் ஒரு வருடத்தில் இது எண்ணற்ற தொழில் வாய்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளதுடன், இலங்கையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை வெளிக்காண்பித்துள்ளது.

FitsAir இன் செல்வாக்கு வணிக உலகிற்கும் நீண்டுள்ளது. இந்த விமான சேவை தனது சரக்கு சேவைகள் மூலமாக பொருட்கள் தங்குதடையின்றி சுமக்கப்படுவதற்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதன் மூலமாக பிராந்திய வர்த்தகம் மற்றும் வணிகச் செயல்பாடுகளையும் மேம்படுத்துகின்றது.

புத்தாக்கத்தின் மீதான உணர்வு மேலீட்டின் காரணமாக, ஏனைய விமான சேவைகளுடன் கூட்டாண்மைகள் மற்றும் கூட்டணிகளை ஏற்படுத்தி, விமான சேவை மார்க்கங்களை நீட்டித்து, பிரயாணிகளுக்கு இன்னும் அதிகளவிலான தெரிவுகளை வழங்கி வருகின்றது. எதிர்காலத்தைப் பொறுத்தவரை, எதிர்வரும் மாதங்களில் வியப்பூட்டும் வகையில் இன்னும் புதிய இடங்களுக்கு பறக்கவுள்ளமை தொடர்பில் இந்த விமான சேவை வியப்பூட்டும் அறிவிப்புக்களை வெளியிடவுள்ளது.

கட்டுபடி என்பதன் மீது அர்ப்பணிப்புடன் உள்ள FitsAir, மிகவும் எளிமையான கட்டண அமைப்பை வழங்குகின்றது. அடிப்படை பிரயாணச்சீட்டின் விலையானது ஆசனம், பொதி மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை உள்ளடக்குகின்றது. விருப்பமான ஆசனத்தைத் தெரிவு செய்தல், உணவுகள் போன்ற விருப்பத்திற்குரிய கூடுதல் சேவைகளை ஒரு சிறு தொகை கட்டணத்தை கூடுதலாகச் செலுத்துவதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தமது பிரயாண அனுபவத்தை தாம் விரும்பியவாறு தீர்மானித்துக் கொள்ள முடியும். இந்த நெகிழ்வுத்தன்மையானது பிரயாணிகள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, தாம் விரும்புகின்றவாறு தமது பிரயாணத்தை தீர்மானித்துக் கொள்ள முடியும்.

விமானத்திற்கு தேவையான எரிபொருள் கிடைக்குமா இல்லையா என்ற ஒரு காலகட்டத்தில் இந்த வியத்தகு பயணத்தில் FitsAir காலடியெடுத்து வைத்தமை அதன் நெகிழ்திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றைக் காண்பிக்கின்றது. நாட்டிலுள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரேயொரு சர்வதேச விமான சேவை என்ற வகையில், இலங்கையின் விமானப் போக்குவரத்து தொழில்துறையில் வலுவான நம்பிக்கையுடன் தேசத்தின் பெருமையை குவைளயுசை சுமக்கின்றது. பாரம்பரியமாக வெளிநாட்டு விமான சேவைகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற சர்வதேச போக்குவரத்துச் சந்தையில் கணிசமான பங்கினை தன்னகப்படுத்துவதே இதன் இலக்காகும்.

FitsAir தொடர்பான விபரங்கள் FitsAir ஆகாய சரக்கு சேவை வர்த்தகமாக 1997 ஆம் ஆண்டில் தனது செயல்பாடுகளை ஆரம்பித்தது. விமானப் போக்குவரத்து துறையில் பல தசாப்த கால அனுபவம் மற்றும் பல்லாயிரக்கணக்கான விமானப் பறப்புக்களுடன் , இலங்கைக்கு வெளியேயுள்ள இடங்களுக்கு அட்டவணைப் பிரகாரம் சர்வதேச பிரயாணிகள் விமான சேவையை இயக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான முதலாவது விமான சேவையாக FitsAir மாறியது.

இந்த விமான சேவையானது, அதிநவீன யு320 ஆகாய விமானங்களை இயக்கி வருகின்றது. அனைத்திற்கும் மேலாக பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் FitsAir, தனது அதியுயர் தரமான சேவையையிட்டு பெருமை கொள்கின்றது. இலங்கையில் பன்முக துறைகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கூட்டு நிறுவனங்கள் குழுமமான Aberdeen Holdings   இன் அங்கமாக FitsAir உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32