சகித்து வாழும் பெண்கள் 

Published By: Nanthini

19 Oct, 2023 | 05:28 PM
image

ல்விக்காக, பொருள் ஈட்டுவதற்காக, தூதுக்காக, பரத்தைக்காக ஆண் தன் மனைவியை விட்டுப் பிரிவான் என்று சொல்லும் இலக்கணம், கல்வியும் தூதும் உயர்ந்தோர்க்கு மட்டுமே உரியவை. ஆனால் பரத்தையர் பிரிவு மட்டும் அனைவருக்கும் உரியது என்கிறது. பேதங்களின்றி எல்லாத் தரப்பு ஆண்களாலும் ஒடுக்கப்படக்கூடிய இனமாக, எல்லாக் காலத்திலும் பெண்களே இருந்துவருகின்றனர் என்பதையே இச்செய்தி சொல்கிறது.

காலையில் எழுந்ததுமே, தேரைத் தயார் செய்து தன் விருப்பத்துக்குரிய பெண்ணிடம் தலைவன் செல்வதைப் பார்த்ததும், குழந்தையைப் பெற்ற மகிழ்வு சிறிதும் இல்லாது, பெண்ணாய்ப் பிறந்ததே மிகுந்த துன்பத்துக்குரியது என்று வருந்துகிறாள் ஒரு தலைமகள். மற்றொருத்தியோ, தலைவனின் புற ஒழுக்கத்தை நினைத்து வருந்தவும், ஊடல் கொள்ளவும்தான் நம்மால் முடியுமே தவிர, தலைமகனை ஒதுக்கிவிட முடியுமா? அப்படி ஒதுக்கினால், நம் பிள்ளைகள் வளமின்றி வற்றிப்போன நம் மார்பில் பாலருந்தவும் இயலாது பசியில் உழல்வார்கள் என்கிறாள்.

அக்காலத்தில் ஆணைச் சார்ந்தே குடும்பம் இருந்திருக்கிறது. ஆணை ஒதுக்கிவிட்டால் அவனை நம்பியிருந்த குடும்பம் வறுமையில் தள்ளப்படும். எனவே, ஒரு பெண்ணால் தன் கணவனின் புற ஒழுக்கத்தை முழுமையாகக் கண்டிக்க இயலாது. இன்றளவும் பெண் தன் குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, சமூகத்துக்காக ஆணின் எல்லா நடவடிக்கைகளையும் சகித்துக்கொண்டு வாழ்பவளாகவே இருக்கிறாள். கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் கிடைத்த பின்னும்கூட ஒரு பெண்ணுக்குத் தனித்து வாழ்தல் அரிதாகவே சாத்தியமாகிறது.

(ஒரு பெண்ணின் குமுறல் - எங்கோ வாசித்த ஞாபகம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right