வவுனியா மகாரம்பைகுளத்தில்  உறவினர்கள் வீட்டில் வசித்துவந்த விஜயகுமார்  சரஸ்வதி (56) என்ற  இரண்டு பிள்ளைகளின் தாயார் காணாமற் போயுள்ளார்.

இவர் மட்டக்களப்பு விபுலானந்தபுரத்தை சேர்ந்தவர் இந்த  மாதம் (10) திகதி அதிகாலையில் இருந்து   இன்று வரை இவரை காணவில்லை  என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவரை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இவரைப்பற்றிய  தகவல்கள் தெரிந்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது