பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை : உயர்நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் - அனுரகுமார

Published By: Vishnu

19 Oct, 2023 | 04:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கவில்லை, சபைக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதை நீதியமைச்சர் உயர்நீதிமன்றத்துக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023.10.03 ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் பிரேரணை முன்னறிவித்தல்கள் மற்றும்  தினப்பணிகள் பிரிவில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களை  சபைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடப்பட்டது.

சட்டமூல சமர்ப்பிப்பு பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்பட்டதன் பின்னர் நாட்டு பிரஜைகள் எவரும் அந்த சட்டமூலத்தை இரண்டு வாரங்களுக்குள் (14 நாட்கள்) உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.ஆனால் முதல் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

'சட்டமூலம் ஒன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் நாட்டு பிரஜைகள் அதை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் ' என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே  ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சபைக்கு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை.

சட்டமூலம் ஒன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர்  உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியுமா, அல்லது சட்டமூலம் சபைக்கு சமர்ப்பித்ததன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியுமா? என்ற பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு பிரகாரம் நீதிமன்றம் செயற்படாது.அரசியலமைப்புக்கு அமைவாகவே நீதிமன்றம் செயற்படும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தின் சவாலுக்குட்படுத்தும் காலவகாசத்தை முடக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா ? என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் உயர்நீதிமன்றத்துக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36