(எம்.வை.எம்.சியாம்)
விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 28 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது 28,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கலால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 9 மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் 28 ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 3 ஆயிரத்து 756 பெண்கள் உட்பட 28 ஆயிரத்து 441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்புகளின் போது திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 260 மில்லியன் ரூபாவைத் அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் 57 கலால் நிலையங்கள், 05 கலால் விசேட அதிரடிப் பிரிவுகள் மற்றும் கலால் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளை உள்ளடக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மதுபானம் போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றம் 122 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மது விற்பனைக்கான கலால் உரிமம்பெற்ற இடங்கள் தொடர்பாக 3,415 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கலால் உரிமம் பெற்ற இடங்களில் குற்றங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 98 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான இந்த சோதனைகள் பொதுமக்கள் நேரடியாக வழங்கிய முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலும் கலால் தலைமையகத்தில் நிறுவப்பட்ட 1913 என்ற தொலைபேசி எண் மூலம் கலால் செயற்பாட்டு அறை மூலமாகவும் நடத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM