அபிராமி நாட்டியப்பள்ளியின் இயக்குநரும் கலாவித்தகருமான ரேனுகா சுரேஷின் மாணவியான சௌந்தர்யா கோவிந்தராஜுவின் அரங்கேற்றம் பாரிஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் ‘கலாசூரி' திவ்யா சுஜேன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை கலைஞர்களான யாதவன், நல்லை கண்ணதாசன், இசைப்பிரியன், ஜலதரன் ஆகியோருடன் இந்தியாவில் இருந்து வருகை தந்த மோகன்ராஜும் இணைந்து அணிசேர் கலைஞர்களாக பங்கேற்றனர்.
இந்த நாட்டிய அரங்கேற்றத்தில் அபிராமி நடனப்பள்ளி மாணவிகளான செல்வி ஸ்ரெனிசியா மற்றும் செல்வன் ஜூலியன் ஆகியோர் முதன்முறையாக நட்டுவாங்கம் இசைத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர்.
இவர்கள் இருவரும் நடன ஆசிரியை ரேனுகா சுரேஷ் மற்றும் அபிநயக்ஷேத்ராவின் இணையவழி நட்டுவாங்கப் பட்டையக் கற்கை நெறியை பூர்த்தி செய்து ஆசிரியை திவ்யா சுஜேனிடமும் நட்டுவாங்கம் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரங்கேற்றத்தின்போது சௌந்தர்யா ஆடிய ‘பாரதியின் பாஞ்சாலி சபதமும் புதுமை பெண்ணும்' நடனத்துக்கு அரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள்.
புலம்பெயர்ந்த நாட்டில் உள்ளவர்களின் தமிழ்ப்பற்று, கலைப்பற்றினை கண்டு தான் வியப்பதாகவும், அபிராமி நாட்டியப்பள்ளி 20 வருடங்களுக்கும் மேலாக ஆற்றிவருகின்ற கடின உழைப்பின் பயனை மாணவர்கள் அனுபவிப்பதை கண்டு மகிழ்வதாயும் நடன கலைஞர் திவ்யா சுஜேன் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும், நிகழ்வில் கலந்து சிறப்பித்த மூத்த நடன ஆசிரியரும் இலங்கையைச் சேர்ந்த முதல் ஆண் நடனக் கலைஞருமான தயாளசிங்கம் நடனம் குறித்து கூறுகையில், "சௌந்தர்யா ‘ஆடல் கலைஞர் பத்மினி' போல் கண்முன் தோன்றுகிறார். அவரது முக பாவ அபிநயங்கள் மெய் சிலிர்க்கச் செய்கின்றன" என பாராட்டி வாழ்த்தினார்.
நேர்த்தியான உருப்படிகளை தேர்ந்தெடுத்து முறைப்படி கற்றுக்கொடுத்து வெற்றிகரமாக அரங்கேற்றியதுடன், பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பேணி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் செயலில் தம்மை உறுதியாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் அபிராமி நடனப்பள்ளி இயக்குநருக்கு சபையோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM