பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கல் : சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுங்கள் உதய கம்மன்பில சபாநாயகரிடம் வலியுறுத்தல்

Published By: Vishnu

19 Oct, 2023 | 01:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு பேரவையின் அனுமதி இல்லாமல் ஜனாதிபதியால் பொலிஸ்மா அதிபர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க முடியாது. பேரவையின் அனுமதியுடன் தான் நியமனம் வழங்க வேண்டும்.ஆனால் தற்போது நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் அனுமதி கோரும் புதிய கலாச்சாரம் தோற்றம் பெற்றுள்ளது.பொலிஸ்மா அதிபர் விவகாரம் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சபாநாயகரிடம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகரும்   உறுப்பினர்களாக  பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உள்ளார்கள்.போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாப்பதற்காகவே சி.டி.விக்கிரமரத்னவுக்கான சேவை நீடிப்பு பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நீக்கியது என அரசாங்கத்துக்கு சொந்தமான தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தியால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.ஆகவே இந்த செய்தியின் உண்மை தன்மை என்ன என்பதை பகிரங்கப்படுத்துங்கள்.இவ்வாறான செய்தி வெளியிட்ட பத்திரிகையை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள்.

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு அமைய  பொலிஸ்மா அதிபரை நியமிக்கவோ,சேவை நீடிப்பு வழங்கவோ, முடியாது.அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை ஜனாதிபதி விரும்பினால் செயற்படுத்தலாம்,அல்லது செயற்படுத்தாமல் இருக்கலாம் என நீங்கள் (சபாநாயகர்) குறிப்பிட்டதை  தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை பெற்றதன் பின்னரே ஜனாதிபதியால்  ஆணைக்குழு  உறுப்பினர்கள் உட்பட முக்கிய அரச நியமனங்களை  வழங்க வேண்டும். என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை பெறும் புதிய கலாச்சாரம் தோற்றம் பெற்றுள்ளது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் நீங்கள் (சபாநாயகரை நோக்கி)  சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:33:27
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29