கொழும்பு புறக்கோட்டையில் கைத்தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்கள் விற்பனை செய்யும் 20 நிலையங்கள் மீது நுகர்வோர் அதிகார சபை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அந்த விற்பனை நிலையங்களில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் கைத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களுக்கு உத்தரவாதச் சான்றிதழ் வழங்காமை, SLS தரத்துக்கு இணங்காத சாதனங்களை விற்பனை செய்தல் மற்றும் விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சில சாதனங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் புதன்கிழமை (18) புற்ககோட்டையில் கைத்தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் விசேட சோதனையை மேற்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM