யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ்  சந்தேகநபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015 ஆண்டு மே மாதம் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது