தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி, ஆளுனர்  வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சராக பரிந்துரைக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால், முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டஇ அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனக்குள்ள 124 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். 

அத்தோடு எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆளுனருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். மேலும் இரவு சுமார் 8 மணியளவில் அமைச்சர்களுடன் சென்று ஆளுனரை சந்தித்து, ஆட்சியமைக்க அனுமதி கோரியிருந்தார். 

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுனர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். அத்தோடு 15 நாட்களில் சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

அதன் பின்னர் தனது அமைச்சரவையில் இடம்பெறும்  30 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி, ஆளுனரிடம் வழங்கினார்.  குறித்த பட்டியலிற்கு அமைய புதிய அமைச்சரவையை பதவிப்பிரமாணம் செய்துள்ளார் ஆளுனர். 

அதன்படி, இன்று மாலை ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு விழா தொடங்கியது. முதலில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுனர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளதக்க இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.