கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்  நிலைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

இதன்படி பெண்ணொருவரிடம் கொண்ட காதல் தொடர்பே குறித்த மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் 15 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 10 பேரை மருதானை பொலிஸார் கைதுசெய்திருந்ததுடன், மேலும் 5 பேர் பொரளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதில் பொரளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தலா ஒரு இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், ஏனைய 10 மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை குறித்த மோதல் சம்பவத்தில் எட்டு மாணவர்கள் காயமடைந்ததுடன், இரண்டு பஸ்கள், கார் மற்றும் வேன் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.