நடிகர் விஜய்க்கு கடிதம் அனுப்பியதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை - தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மறுப்பு

Published By: Digital Desk 3

18 Oct, 2023 | 03:16 PM
image

(நா.தனுஜா)

வட, கிழக்கில் வெள்ளிக்கிழமை (20) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் 'லியோ' திரைப்படத்தை திரையிடவேண்டாம் எனக்கோரி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தென்னிந்திய நடிகர் விஜய்க்கு கடிதம் அனுப்பியிருப்பதாக வெளியான செய்திகளை அக்கட்சிகளின் பிரதிநிதிகள் முற்றாக மறுத்துள்ளனர்.

தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை வியாழக்கிழமை (19) வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படம் இலங்கையிலுள்ள திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில், 'லியோ' திரைப்படம் நாளைய தினம் இலங்கையில் திரையிடப்பட்டால், அது அண்மையில் பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு நீதிகோரி தாம் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கவிருக்கும் ஹர்த்தாலுக்கு பின்னடைவாக அமையும் எனவும், ஆகவே அத்திரைப்படத்தை 20 ஆம் திகதி இலங்கையில் திரையிடவேண்டாம் எனவும் வலியுறுத்தி 6 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து நடிகர் விஜய்க்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதாக நேற்றைய தினம் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

அதுமாத்திரமன்றி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய கட்சித்தலைவர் என்.சிறிகாந்தா ஆகியோரின் கையெழுத்துக்களுடன் தமிழ் அரசியல் கட்சிகளால் அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றும் தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல சினிமா விமர்சகர்களின் சமூகவலைத்தளப்பக்கங்களில் வெளியாகின.

இருப்பினும் இக்கடிதம் குறித்து வெளியான செய்திகளை முற்றாக மறுத்திருக்கும் மேற்படி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் விஜய்க்கு தாம் எந்தவொரு கடிதத்தையும் அனுப்பவில்லை என்றும், அவ்வாறு பரவியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் விளக்கமளித்துள்ளனர். 

அத்தோடு, தாம் அனுப்பிவைத்ததாகப் பகிரப்பட்டுவரும் கடிதங்களிலுள்ள கையெழுத்துக்கள் ஏற்கனவே தாம் வேறு தரப்பினருக்கு அனுப்பிவைத்த பழைய கடிதங்களிலிருந்து பெறப்பட்ட கையெழுத்துக்கள் என்வும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15