உலகக் கிண்ண ரக்பி காலிறுதிக்கு ஆர்ஜென்டீனா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து முன்னேறின

18 Oct, 2023 | 04:16 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிப் போட்டிகளில் ஆர்ஜென்டீனா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

பிரான்ஸில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதி சுற்றுப் போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றிருந்தன. இதன் முதலாவது காலிறுதிப் போட்டியில் பலம் பொருந்திய வேல்ஸ் அணியை ஆர்ஜென்டீனா அணி 29க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

போட்டியின் 38ஆவது நிமிடம் வரை 10க்கு 0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் அணியை, ஆர்ஜென்டீனா அணி சிறப்பாக எதிர்த்தாடியிருந்தது. இதில் 39, 44, 45 ஆகிய நிமிடங்களில் ஆர்ஜென்டீன அணிக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்புக்களையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு 9 புள்ளிகளைப் பெற்று மீண்டதுடன், முதல் பாதி 10க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் வேல்ஸ் அணி முன்னிலை பெற்றிருந்தது. 

இதையடுத்து போட்டியின் இரண்டாவது பாதியில் (48ஆவது நிமிடம்) ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை எமிலியானோ பொ‍வெல்லி ‍கடந்த 3 மூன்று முறைகளைப் போலவே 4ஆவது முறையாக கிடைத்த வாய்ப்பிலும் பந்தை  சரியாக இரண்டு கம்பங்களுக்கிடையே நேர்த்தியாக செலுத்தி 12க்கு 10 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார். 

அதன் பின்னர், 55ஆவது நிமிடத்தில் ட்ரை வைத்த வேல்ஸ் அணி, கொன்வேர்சனையும் பெற்று 17க்கு 12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றபோதிலும், அதன் பின்னர் அவர்களுக்கு எதுவித புள்ளிகளும் பெற முடியாமல் போனது.

மறுபுறத்தில் ஆர்ஜென்டீனா, 68, 77ஆவது நிமிடங்களில் 2 ட்ரைகளை வைத்ததுடன், அதற்கான கொன்வேசன்களையும் சரியாக பயன்படுத்தி முழுமையான புள்ளிகளை பெற்றதுடன், 81ஆவது நிமிடத்திலும், மீண்டுமொரு பெனால்டி சாதமாக்கிக் கொண்டு 29க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், முதலாவது காலிறுதிப் போட்டியைக் காட்டிலும், ஏனைய 3 காலிறுதிப் போட்டிகளும் மிகவும் இறுக்கமான  போட்டிகளாகவே அமைந்தது. அதில், இரண்டாவது காலிறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை நியூஸிலாந்து அணி  28க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவை சந்திக்கவுள்ளது.

3ஆவது காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் முதலிடத்திலும் நடப்புச் சம்பியனான தென் ஆபிரிக்காவை எதிர்கொண்ட போட்டி ஏற்பாட்டு நாடான பிரான்ஸ், போட்டியின் ஆரம்பத்தில் 20க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், இரண்டாவது பாதியில் மீண்டெழுந்த தென் ஆபிரிக்கா புள்ளிகளைப் பெற்று போட்டியின் நிறைவில் 29க்கு 28 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டியது. 

நான்காவது காலிறுதிப் போட்டியின் முதல் பாதியில் 21க்கு 10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையிலிருந்து இங்கிலாந்து, போட்டியின் நிறைவில் 30க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அரை இறுதியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடவுள்ளது.

இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஆக்ரோஷமாக விளையாடிய வேல்ஸ் அணி 14ஆவது நிமிடத்தில் ட்ரை ஒன்றை வைத்து புள்ளிக்கணக்கை தொடக்கியதுடன், அதற்கான கொன்வேர்சனையும் பெற்றது. 

அதன் பின்னர், 21ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியையும் சரிவர பயன்படுத்தி 3 புள்ளிகளைப் பெற்று 10க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது வேல்ஸ் அணி. 

எனினும், 39, 44, 45 ஆகிய நிமிடங்களில் ஆர்ஜென்டீனா அணிக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்புக்களையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு 9 புள்ளிகளைப் பெற்றது. அதன்படி போட்டியின் முதல் பாதியில் வேல்ஸ் 10 புள்ளிகளையும், ஆர்ஜென்டீனா 9 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

இந்நிலையில், போட்டியின் இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கிய ஆர்ஜென்டீனாவுக்கு, மீண்டுமொரு முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னோக்கி நகர்ந்த ஆர்ஜென்டீனா, 68 மற்றும் 77ஆவது நிமிடங்களில் 2 ட்ரைகளை வைத்ததுடன், அதற்கான கொன்வேஷன்களையும் சரியாக பயன்படுத்தி முழுமையான புள்ளிகளை ஈட்டி 26க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்ஜென்டீனா முன்னிலை வகித்தது. 

ட்ரைகளை வைப்பதற்கு வேல்ஸ் அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஆர்ஜென்டீனா தடுத்திருந்ததுடன், 81ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி 29க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18