சிறைசென்ற சசிகலாவால் தெரிவுசெய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆளுனர் முன்னிலையில் தமிழக முதல்வராக சற்று முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இது குறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வை சசிகலாவின் குடும்பத்திடம் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று சூளுரைத்தார்.

மேலும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்தும்வரை எதிரிகளுடன் தான் ‘தர்மயுத்தம்’ நடத்தப்போவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

அ.தி.மு.க. ஆதரவாளர்கள் அம்மாவின் ஆட்சியையே விரும்புவார்கள் என்றும், இதை உறுதிசெய்யும் வகையில், கட்சியின் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து, கட்சியின் தலைமையை யாரிடம் ஒப்படைப்பது என்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.