(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு பயனற்றது. இது பிரச்சினையை மூடி மறைப்பதற்கான நடவடிக்கையாகும் என பிரதான எதிர்க்கட்சி சபையில் குற்றம் சாட்டியது.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்ட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை அரச தரப்பு எம்.பி.யான மேஜர் பிரதீப் உடுகொட முன்வைத்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மீண்டும் ஒரு தெரிவுக்குழுவை நியமிப்பது பயனற்றது. இது மக்களை ஏமாற்றும் முயற்சி. இதனூடாக சிறந்த விசாரணையை முன்னெடுக்க முடியாது.இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள். அத்துடன் சனல் 4 அலைவரிசையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் அனைத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் உறுதிப்படுத்தபட்டுள்ளது.அதனால் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த ராஜித்த சேனாரத்ன கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை சட்டமூலமாக்கியது பாராளுமன்றத்தில் இருக்கும் சிரேஷ்ட அதிகாரிகள். நாங்கள் அதனை செய்யவி்லலை. அதனால் மீண்டும் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து பாராளுமன்றத்தை நகைப்புக்குட்படுத்தக்கூடாது. பாராளுமன்ற தெரிவுக்குழுக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அதனை இல்லாது செய்துவிடாதீர்கள் என்றார்.
சுயாதீன எதிரணி எம்.பி.யான அனுர பிரியதர்ஷன யாப்பா கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடாதவர்களை ஈடுபடுத்தி விசாரணை நடத்தப்பட வேண்டும். புதிய குழுவொன்றை நியமிக்க வேண்டும். எதிர்க்கட்சித் உறுப்பினர்களின் கருத்துடன் உடன்படுகிறேன். அவ்வாறு இல்லாமல் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து இந்த விடயத்தை மறைக்க முயற்சிக்காதீர்கள் என்றார்.
எதிரணி எம்.பி.க்களின் இந்தக்கருத்துக்களுக்கு பதிலளித்த அரச தரப்பு பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதால் ஏனைய விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்களும் இருக்கிறோம். அத்துடன் கத்தோலிக்க சபை முன்வைக்கும் விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் விசாரணை செய்ய முடியாது. அதனை பாதுகாப்பு தரப்பினரே முன்னெடுக்க வேண்டும். அதனால் தற்போது அமைக்கவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் இந்த விசாரணைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM