குரு பகவானின் அருளை பெறுவதற்கான எளிய வாழ்வியல் பரிகாரங்கள்...?

17 Oct, 2023 | 04:58 PM
image

போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இன்றைய சூழலில் ஒருவரது வெற்றி என்பது அவருடைய சாமர்த்தியமான சமயோசிதமான உழைப்பை விட அவருக்கு குரு பகவானின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

குரு பகவானின் அருளை பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் பல்வேறு வகையினதான பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து சிலவற்றை உங்களுக்காக வழங்குகிறோம்.

உடனே எம்மில் சிலர் குரு பகவான் என்றால் யார்? அவருடைய அருள் இல்லை என்பதை எப்படி நாம் புரிந்து கொள்வது? என குதர்க்கமாக வாதிடுவர்.  உங்களில் யாருக்கேனும் பின்வரும் விடயங்களில் தடையோ பாதிப்போ இருந்தால் அவர்களுக்கு குருவின் பரிபூரண அருள் இல்லை என்பதனை சூட்சமமாக உணர்ந்து கொள்ளுங்கள்.

ஓ லெவல் மற்றும் ஏ லெவல் அல்லது உயர் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டாலோ அல்லது ஒஸ்துமா பாதிப்பு ஏற்பட்டாலோ உங்களுக்கு குரு பகவானின் அருள் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

வேறு சிலருக்கு.. சிறுக சிறுக சேமித்து தங்க நகைகளை கிராம் கணக்கில் வாங்கி சேகரிப்பர். ஆனால் அந்த சிறிதளவு தங்கம் கூட வீட்டில் தங்காமல் பல்வேறு சூழல்களில் ஏற்படும் நெருக்கடியான காரணங்களால் அவை அடகு கடைக்கு சென்று விடும். சில பெண்மணிகள் தங்களது கழுத்தில் தங்கத்தில் கூட தாலியை செய்து அணிந்திருக்க இயலாத சூழல் உருவாகும். இவை அனைத்தும் குரு பகவானின் அருள் இல்லாததே காரணம்.

சிலர் அவர்களுடைய உயரத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டிய உடல் எடையில் இல்லாமல், கூடுதல் ஏடையிலோ அல்லது உடல் பருமனாகவோ இருந்தால் அவர்களுக்கும் குரு பகவானின் ஆசி கிடைக்கவில்லை என்றே பொருள். மேலும் சிலருக்கு இவ்விடயத்தில் அவர்களின் உடலில் அளவற்ற கொழுப்பு கட்டிகள் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கும் குரு பகவானின் அருள் இல்லை என்று பொருள்.

உங்களுக்கு குரு பகவானின் பரிபூரண அருள் இல்லை என்றால் பல சந்தர்ப்பங்களில் பொய்களை சரமாரியாக பேசுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடத்தில் கூட உண்மையாக இல்லாமல் பொய்களை பேசுவீர்கள்.

சில மாணவர்கள் அதிக பெறுபேறுகள் பெற்று சித்தி அடையாமல் தோல்வி அடைந்ததற்கு பாடசாலையில் கல்வி கற்பித்த குருமார்கள் தான் காரணம் என ஆசிரியர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவார்கள். இவர்களுக்கும் குருவின் அருள் இல்லை என்றே உணர்ந்து கொள்ளலாம்.‌

மேலும் சிலருக்கு நாளாந்த வாழ்க்கை நடைமுறையில் நினைவுத்திறன் குறைவாகவே இருக்கும். சில விடயங்களை மட்டுமே நினைவில் கொண்டிருப்பர். இவர்களுக்கும் குரு பகவானின் பரிபூரண அருள் இல்லை என்றே உறுதியாக கூறலாம்.

இவர்கள் எல்லாம் பின்வரும் எளிய பரிகாரங்களை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் குருவின் கடைக்கண் பார்வை பெற்று அவரின் ஆசியுடன் வாழ்க்கையில் முன்னேற இயலும்.

ஆலயத்தில் உள்ள இறைவனின் சன்னதிகளில் அபிஷேகம் செய்வதற்கு தேவையான மஞ்சள் அல்லது மஞ்சள் தூளை வாங்கி தானமாக கொடுக்கலாம். இல்லையெனில் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் விரும்பும் வகையினதான ஆன்மீக குறிப்புகள் அடங்கி குறிப்பேட்டை தானமாக வழங்கலாம்.

மூன்று கிராம் முதல் உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற அளவிலான தங்க நகைகளை ஆபரணங்களாக ஆக்கி அதாவது மோதிரமாகவோ அல்லது பிரேஸ்லெட்டாகவோ அல்லது கழுத்தில் அணியும் செயினாகவோ அணிந்து கொள்ள வேண்டும்.

பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து அவர்கள் விரும்பும் வகையினதான காலணிகளை வாங்கி பரிசாக அளித்தாலும் உங்களுக்கு குருவின் அருள் கிடைக்கப் பெறும். வியாழக்கிழமைகளில் வீட்டுக்கு அருகில் இருக்கும் அரச மரத்தடி விநாயகருக்கு விளக்கேற்றி, 21 முறை சுற்றி வந்தாலும் குருவின் அருள் கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் நவகிரக ஆலயங்களுக்கு சென்று கொண்டை கடலை சுண்டல் அல்லது பருப்பு பாயாசத்தை நைவேத்தியமாக படைத்து அதனை தானமாக வழங்கலாம். இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போது குருவருள் கிடைக்க பெற்று, உங்களின் பண பற்றாக்குறை தீர்ந்து, பண வரவு அதிகரித்து, மகிழ்ச்சியை அளிக்கும்.

தொகுப்பு சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி பெறுவதற்கான நட்சத்திர சூட்சமம்...!?

2024-09-12 16:40:45
news-image

கண்டாந்திர நட்சத்திர தோஷமும், பரிகாரமும்

2024-09-11 17:16:39
news-image

தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன...

2024-09-10 14:45:36
news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54