பன்றிக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் தொழிலாளி

Published By: Digital Desk 3

17 Oct, 2023 | 04:44 PM
image

பன்றிக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் தொழிலாளி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் தேயிலை மலையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த “அக்குபட்டாஸ்” வெடித்து (52) வயது பெண் தொழிலாளி ஒருவர்  காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூப்பனை தோட்ட விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நூறு மீட்டர் தூரத்தில் காணப்படும் வீதியின் மேற்பகுதியில் உள்ள தேயிலை மலையில் இந்த வெடிப்பு சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோகில ஆரியதாஸ தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த (52) வயதுடைய பெண் தொழிலாளி தனக்கு ஒதுக்கப்பட்ட தேனீர் இடைவேளையின் போது தேனீர் அருந்திவிட்டு வெற்றிலை பாடுவதற்கு தேயிலை மலையில் உள்ள கல் ஒன்றில் பாக்கு உடைக்க முற்பட்டபோது அக் கல்லுக்கு கீழ் இருந்ததாக கூறப்படும் “அக்குபட்டாஸ்” வெடித்து காயங்கள் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இவ்வாறு வெடித்த வெடி “அக்குப்பட்டாஸ் ” என்று சொன்னாலும் இதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது தொடர்பாக பரிசோதணையும், விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும்,  இந்த  வெடி பன்றிக்கு வைக்கப்பட்டதாகவும் பூப்பனை மேல்பிரிவு தோட்ட தேயிலை மலைகளில் அதிகமான காட்டு பன்றிகள் நடமாடுவதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 10:05:04
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58
news-image

இன்றைய வானிலை

2025-04-28 06:04:54
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்த காத்திருக்கிறோம்; ...

2025-04-28 01:47:05
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலில் கண்டி நகரம்...

2025-04-27 22:46:34
news-image

உடுவரவில் மண்சரிவு; மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

2025-04-27 22:27:27
news-image

தபால்மூல வாக்களிப்பு செவ்வாயுடன் நிறைவு :...

2025-04-27 19:55:56