ஒகுலோகுட்டேனியஸ் அல்பினிசம் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

17 Oct, 2023 | 08:30 PM
image

இன்றைய சூழ்நிலையில் உலகளவில் பிறக்கும் இருபதாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஒகுலோகுட்டேனியஸ் அல்பினிசம் எனும் மரபணு குறைபாடு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது முழுமையான நிவாரண சிகிச்சைகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.‌

ஓகுலோகுட்டேனியஸ் அல்பினிசம் என்பது எம்முடைய பாரம்பரிய பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவும் பிரத்யேக மரபணு கோளாறாகும். இத்தகையவர்களுக்கு அவர்களின் உடலில் முடி கண் பார்வை, தோல் ஆகியவற்றிற்கு நிறத்தை அளிப்பதற்காக சுரக்கும் மெலனின் எனப்படும் சுரப்பிகளின் சுரப்பு என்பது இயல்பான அளவை விட மிக குறைவாக இருக்கும். 

ஒருவரது உடலில் சுரக்கும் மெலனின் எனும் ஹோர்மோன் தான் அவர்களது தோலின் நிறத்தையும் முடியின் நிறத்தையும் கண்களின் நிறத்தையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் சில பிள்ளைகளின் கண்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிலும் மெலனின் பங்களிப்பு உண்டு. எனவே  ஒகுலோகுட்டேனியஸ் அல்பினிசம் எனும் பாதிப்பு உள்ளவர்களுக்கு முடியின் நிறம் வெள்ளையாகவோ அல்லது வேறு நிறத்திலோ இருக்கக்கூடும். மேலும் இவர்களுக்கு பார்வை திறனிலும் குறைபாடு ஏற்படக்கூடும்.‌

ஒகுலோகுட்டேனியஸ் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தோல், முடி மற்றும் கண்ணின் நிறம் ஆகியவற்றில் வேறுபாடு ஏற்படும். சிலருக்கு சூரிய ஒளியின் காரணமாகவும் தோலில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களின் தோலில் ஏற்படும் மச்சங்கள் இளம் சிவப்பு நிறத்துடன் காணப்படலாம். இவர்களில் சிலருக்கு ஃபோட்டோ ஃபோபியா எனப்படும் பாதிப்பும் ஏற்படக்கூடும். இவர்களின் பார்வை திறனில் பாதிப்பு உண்டாகும். இதனால் இவர்கள் ஆண்டுதோறும் மருத்துவர்களின் கண்காணிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பிரத்யேக பரிசோதனையை பரிந்துரைப்பார்கள். மேலும் இது மரபணு கோளாறு வகையை சார்ந்ததால் துல்லியமான சிகிச்சைகள் கண்டறியப்படவில்லை. இதற்கு கண் பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் முழுமையான நிவாரணத்தை மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.

ஒகுலோகுட்டேனியஸ் அல்பினிசம் எனப்படும் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களுக்கு தோல் புற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்பதால் இவர்கள் எப்போதும் மருத்துவர்களின் பரிந்துரையை உறுதியாக பின்பற்ற வேண்டியதிருக்கும்.

டொக்டர். தனசேகர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45