ஸ்பெயினைச் சேர்ந்த 64 வயதுப் பெண் ஒருவர், செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

ஸ்பெயினின் வட பிராந்தியத்தில் உள்ள பேர்கோஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த இந்த பெயர் குறிப்பிடப்படாத பெண், அமெரிக்காவில் செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை பெற்றுக்கொண்டவர். இவர் கர்ப்பமடைந்தது உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஸ்பெயின் திரும்பிய இவர், நேற்று முன்தினம் சிசேரியன் முறையில் ஆண், பெண் என இரு குழந்தைகளுக்குத் தாயானார்.

குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கும் வைத்தியசாலை, மற்றொரு அதிர்ச்சி செய்தியையும் வெளியிட்டுள்ளது.

அதாவது, கடந்த 2012ஆம் ஆண்டு இதே பெண் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானதாகவும், பொருளாதாரச் சூழல் காரணமாக அந்தக் குழந்தையை நலன்புரி அமைப்பு ஒன்று தத்தெடுத்து வளர்த்து வருகிறது. 

இந்த நிலையில், அதே பெண், தனது 64வது வயதில், அதுவும் செயன்முறைக் கருத்தரிப்பு மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டமை அதிர்ச்சி தருவதாகவும், தனது குழந்தைகளை அந்தப் பெண் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை என்றும் ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.