ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரைப் போன்று இலங்கை மாற வேண்டுமெனில் நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் - வஜிர அபேவர்தன

Published By: Digital Desk 3

17 Oct, 2023 | 09:44 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று வர வேண்டும் என்பதே தற்போது பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. அவ்வாறெனில் நிச்சயம் நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் போலி செய்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளங்களையும், இன, மத மோதல்களைத் தூண்டும் சமூக வலைத்தளங்களையும் கட்டுப்படுத்துவதற்கேயன்றி பிரதான ஊடகங்களை முடக்குவதற்கானதல்ல என்றும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக போலி செய்திகள் மிகத் துரிதமாக சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி இன மற்றும் மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களுக்கூடாகவே அதிகளவில் பரப்பப்படுகின்றன. எனவே இவ்வாறான செய்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டியது தேசிய தேவையாகும்.

எனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புசட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். இலங்கையானது சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப் போன்று வர வேண்டும் என்று இன்று பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். அந்த நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் மிகக் கடுமையானவையாகவே உள்ளன. ஆனால் நாம் அந்தளவுக்கு சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை.

எவ்வாறிருப்பினும் போலி செய்திகளால் ஏற்படும் சமூக சீரழிவுகள், இளைஞர் யுவதிகளின் தற்கொலைகள் என்பவற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு சமூக வலைத்தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உண்மையான செய்திகள் மக்களை சென்றடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போலி செய்திகள் முற்றாகக் கட்டுப்படுத்தப்படும்.

இந்த சட்ட மூலத்தினால் பிரதான ஊடகங்களுக்கு எவ்வித பாதிப்புக்களோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்பட மாட்டாது. மேலும் இதன் ஊடாக சிரேஷ்ட ஊடகத்துறையைக் கட்டியெழுப்ப முடியும். நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02
news-image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்...

2025-01-15 12:20:40
news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர்...

2025-01-15 12:23:16
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2025-01-15 11:49:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-15 11:47:55
news-image

12-40 வயதுக்குட்ட 50 வீதமானோருக்கு மின்னஞ்சல்...

2025-01-15 11:58:19
news-image

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகளுக்கான...

2025-01-15 11:45:28
news-image

கட்டுநாயக்கவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-15 11:32:54