ஒரு மாற்று மருத்துவ முறைமையாக ஆயுர்வேதம்

18 Oct, 2023 | 09:25 AM
image

ஆயுர்வேதம் ஏறத்தாழ ஜயாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் தோற்றம் பெற்றது. இவ் ஆயுர்வேத மருத்துவமானது நோய்களை குணப்படுத்தும் ஒரு கலையாக உள்ளது. நோய்வாய்ப்பட்ட ஒருவரை மீண்டும் ஆரோக்கியமான நபராக மாற்றுவதனை நோக்காக கொண்டதாக மருத்துவமானது காணப்படுகின்றது. ஆரோக்கியம் என்பது எந்த ஒரு உயிரிலும் காணப்படுகின்ற இயல்பூக்கமாகும். மனிதனில் காணப்படும் இயல்பூக்கங்களின் வழியே சென்றமையால் பெற்றுக்கொண்ட அறிவின் காரணமாகவே இன்றைய உலகில் காணப்படுகின்ற பலவகையான மருத்துவ முறைமைகள் பரிணமித்துள்ளன.

இயற்கையின் ஒரு பகுதியுமான மனிதன் உணவுக்காகவும், தனக்கு வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகையாகவும் எப்பொழுதும் இயற்கையினையே நம்பியிருந்தான். மக்களின் ஆரோக்கியத்தை பேணவும் அதை மீளவும் கொண்டு வரவும் வழி செய்யக்கூடிய ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு மருத்துவமுறைகள் தோன்றுவதற்கு உலகின் பல பகுதிகளிலும் தோற்றம் பெற்ற நாகரிகங்கள் வழிவகுத்தன. 

உணவும் உறைவிடமும் தேடி நாடோடி வாழ்வு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்றபோது தமக்குரிய மருத்துவ அறிவையும் தம்முடன் கொண்டு சென்றனர். சில இடங்களில் இந்த முறைமைகள் ஏனையவற்றுடன் இரண்டறக்கலந்து புதிய முன்னேற்றமடைந்த முறைமைகள் பரிணமித்துள்ளன. பல்வேறு மருத்துவ முறைமைகளாக பரிணமித்துள்ளன.

மருத்துவ முறைமைகளின் தமது மூல வடிவம் மறைந்து போகும் அளவுக்கு மேலும் முன்னேறிய முறைமைகளாக விருத்தி அடைந்து உள்ளன. மருத்துவமுறைகளின் தோற்றம் காலத்துக்குரிய நிலைகளை உலகின் சில ஒதுக்கமாயுள்ள மூலைமுடுக்குகளில் இன்றும்   காணமுடிகிறது. 

இன்றைய உலகில் காணக்கூடியதாக உள்ள சகல மருத்துவ முறைகளும் அதாவது ஆயுர்வேதம், எதிர்முறை மருத்துவம் ,சீனமருத்துவம் மற்றும் யுனானி மருத்துவம் என்பன இவ்வாறு விருத்தி அடைந்தன. ஒரு கருத்தை வெவ்வேறு மொழிகளில் கூறுவது போல சகல மருத்துவ முறைகளும் பல்வேறு கோட்பாடுகள், சொற்பதங்கள் பயன்படுத்துகின்ற போதிலும் அவை ஒரே நோக்கத்தை கொண்டவையாக காணப்படுகின்றன. அதாவது மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல் எனும் நோக்கத்தை கொண்டவையாக உள்ளன.

தற்போது காணப்படுகின்ற மருத்துவ முறைகளும் வழமையான மருத்துவம் அல்லது குறைநிரப்பு மருத்துவம் மற்றும் மாற்றுமருத்துவம் எனும் இரு பிரதான பகுதிகளில் அடங்குகின்றன. எதிர்முறை வைத்தியம் அல்லது அலோதி  வழமையான மருத்துவம்  எனும் பகுதிக்குள் வருகிறது . ஏனைய சகல மருத்துவ முறைகளும் மாற்று மருத்துவம் என வகைப்படுத்துகின்றனர். குறைநிரப்பு மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் கொடுப்பது கடினமான காரியமாக உள்ளது. இந்த பகுதிக்குள் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் அடங்குவதே இதற்கு காரணமாகும் இந்த மருத்துவ புலம் மிகவும் விசாலித்தது. 

அத்துடன், புதிய முறைமைகள் தத்தம் பங்களிப்புக்களை வழங்குவதாலும் ஏற்கனவே காணாப்படுகிற முறைமைகளுடன் இரண்டற கலந்து வருவதாலும் இது தொடர்ச்சியான மாற்றத்தை கண்டு வருகிறது . இருப்பினும் குறைநிரப்பு மற்றும் மாற்று வைத்தியம் என்பது வழமையான மருத்துவத்தின் ஒரு பகுதியாக கருதப்படாத போதிலும் பல வகையான மருத்துவ மற்றும் ஆரோக்கியம் பராமரிப்பு முறைமைகள் நடைமுறைகள் உற்பத்திகள் முதலியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுதியாகும் என குறை நிரப்பு மற்றும் மாற்று மருத்துவத்திற்கான தேசிய நிலையம் அதற்கான வரைவிலக்கணத்தை கூறியுள்ளது.

உயர்தொழிநுட்ப வளர்ச்சியினால் ஆயுர்வேதத்தின் செல்வாக்கானது குறைவடைந்து செல்கின்றது இருப்பினும் கூட மாற்று மருத்துவ முறையினை மக்கள் நடுகின்றனர். ஆங்கில மருத்துவ முறையினைக்காட்டிலும் ஒப்பிடுமிடத்து குறைந்தளவான பயனையே கொண்டுள்ளன. ஆனால் பிரபலமான வர்த்தக பெயர்களுடன் கூடிய மருந்துககளை சந்தைப்படுத்துவதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்யும் அதேவேளை வைத்தியர்களுக்கு அவர்களால் மறுக்க முடியாத அளவுக்கு ஆசை காட்டும் அளவுக்கு கவனிப்புகளை வழங்கி வருகின்றன பெரிய மருந்து உற்பத்தி கம்பனிகள் ஆரோக்கியத்தொழிலை ஆக்கிரமித்துள்ளன. 

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வழமையான மருத்துவ தொழில் செய்பவர்களால் ஒரு தனி நோயாளியுடன் நேரத்தை செலவிடமுடியாது உள்ளது. இது தனக்கு வழங்கப்படும் சிகிச்சை திருப்தியானது அல்ல என நோயாளி சிந்திக்கும் நிலைமைக்கு இட்டுச்செல்கிறது.

சில நோயாளிகளுக்காக வழங்கப்படும் மருந்துகள் வேறு சிக்கல்களை உருக்குவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது. வழமையான மருத்துவ முறையில் காணப்படுகிற இவ்வாறான சிக்கல்கள்; வேறு மருத்துவ முறையினை நாடிச்செல்ல வைக்கிறது. இவ்வாறாக இன்று ஆயுர்வேதமானது வளர்ச்சி கண்டுள்ளது. சகல நோயாளிகளினதும் தேவைகளை பூர்த்தி செய்ய வழமையான மருத்துவம் மட்டும் போதாது என்பதை அறிந்து அதிசிறந்த மருத்துவ கல்லூரிகள் தற்போது மாற்று மருத்துவமான ஆயுர்வேதத்தை நோக்கி திரும்பி உள்ளது. 

ஆரோக்கியமான வாழ்கை பற்றிய நம்பிக்கை இழந்து போன நோயாளர்களுக்கு ஆயுர்வேதம் மற்றும் ஏனைய மாற்று மருத்துவ முறைமைகள் நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய சிகிச்சைகளை வழங்குவதை காணமுடிகிறது. இயற்கையிடம் மீண்டும்போதல் எனும் போக்கு தொடங்கிவிட்டது. நீண்ட காலமாக நோயாளிகள் கண்டு வந்த அனுபவத்திலிருந்து வேறுபட்ட ஒரு மாற்றத்தை இயற்கை மருத்துவ வைத்தியங்கள் அவர்களுக்கு வழங்குகிறது. இக்காலத்தில் நோயாளர்கள் தமது வருத்தங்களுக்கு மருந்தை பெறுவதுடன் திருப்தி அடைந்துவிடுவதில்லை. அவர்கள் தமக்கு கூடுதலான கவனம் தேவை என எதிபார்கிர்றனர். மருந்தோடு சேர்த்து உளவியல் ரீதியான ஆறுதலையும் தேடுகிர்றனர்

பல்வகைப்பட்ட மருத்துவ முறைமைகள் வித்தியாசம் வித்தியாசமான முறைகளை , அணுகுமுறைகளை பயன்படுத்தினாலும் ஒன்றை விட ஒன்று மற்றையது உயர்ந்தது என கூறி விட முடியாது. ஆரோக்கியமான மனிதரை உருவாக்குவதற்கான உன்னத சுழலைக்கொண்டுவர முயல்வான எனும் வகையில் இந்த மருத்துவ முறைமைகள் யாவுமே முக்கியமானவையாகும். 

ஒரு நோயை ஒரு முறைமையினால் குணப்படுத்த முடியாத போது இன்னொரு முறைமை  அதில் வெற்றி  அளிக்கிறது குறித்த முறைமை ஏன் தோல்வி கண்டது என ஆராய்வதன்மூலம் அதை எம்மால் முன்னேற்ற கூடியவாறு இருக்கும் இயற்கை மருத்துவமுறைகளும் இணைத்து பயன்படுத்துகிற போது இணைந்த மருத்துவ முறைமையினை உருவாக்கி கொள்ள முடியும். இதுவரவேற்க கூடிய மற்றும் சிறப்பான செயற்படாக அமையும். நாம் எந்த முறைமையினை பயன்படுத்தினாலும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பேணுவதே அதன் இலக்காக காணப்படும் ஒரு விடயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் போது அது எமது அறிவை எப்போதும் விசாலிக்க செய்யும். அந்த வகையில் மருத்துவ முறைமைகளில் சிறந்த ஒரு மாற்று மருத்துவ முறைமையாக ஆயுர்வேத மருத்துவ முறைமையானது காணப்படுகிறது.

கஜீபா ஜீவரத்தினம்
ஊடககற்கைகள் துறை இரண்டாம் வருடம்
யாழ். பல்கலைக்கழகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45
news-image

கை விரல் நுனியில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-01-01 21:40:07