தீபாவளிக்கு வெளியாகும் விக்ரம் பிரபுவின் 'ரெய்டு'

Published By: Vishnu

16 Oct, 2023 | 07:04 PM
image

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் ஒருவரான விக்ரம் பிரபு கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ரெய்டு' எனும் திரைப்படம், தீபாவளி திருநாளன்று வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ரெய்டு'. இதில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பிரபல இயக்குநர் எம். முத்தையா வசனம் எழுத, கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். 

எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் எம் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். கே. கனிஷ்க் மற்றும் ஜி. மணிகண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை படக்குழுவினர் தீபாவளியன்று படமாளிகையில் திரையிடவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இறுகப் பற்று' எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றிருப்பதால் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரெய்டு' திரைப்படத்திற்கும் திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-18 21:38:39
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40